“சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுப்பது
ஒரு பெரிய குற்றமென்றால், அந்த குற்றத்தை மீண்டும், மீண்டும் செய்வேன். மதச்சார்பற்ற
நாட்டை ஹிந்துஸ்தானமாக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதனை அடித்து நொறுக்கி நாட்டின் பழம்பெருமை
காப்பேன். அதனை குற்றமென்று சொன்னால், அக்குற்றத்தை பலமுறை செய்வேன். மக்களை திரட்டி
நியாயம் சொல்லி, நியாயமான ஒரு அரசை கட்டமைக்க எண்ணுவது குற்றமென்றால், அப்படிப்பட்ட
குற்றவாளியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்”
என்ற கர்ஜனை வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் அஹ்மத் அலி எனும்
இயற்பெயர் கொண்ட பழனிபாபா.
பழனியை அடுத்த ஆயக்குடியில் முதலாளிக் குடும்பம் என அழைக்கப்படும், மிகவும் செல்வந்தக் குடியில் 14-11-1950-ல் பிறந்தார். குன்னூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, கல்லூரி பயில தனது தாய்மாமன் வீடுள்ள ஆயக்குடியில் தங்கலானார். இக்கல்லூரி காலத்திலே அவர் தனது பொதுவாழ்வை, 1969-ம் ஆண்டைய முஸ்லீம் லீக் மேடை ஒன்றில் துவங்கிவிட்டார். அதன்பிறகு மேற்பட்டிப்பிற்க்காக டெல்லி சென்ற அவர், ஐந்து துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பின் தமிழக அரசியலில் நேரடியாக களமாடினார்.
பழனியை அடுத்த ஆயக்குடியில் முதலாளிக் குடும்பம் என அழைக்கப்படும், மிகவும் செல்வந்தக் குடியில் 14-11-1950-ல் பிறந்தார். குன்னூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, கல்லூரி பயில தனது தாய்மாமன் வீடுள்ள ஆயக்குடியில் தங்கலானார். இக்கல்லூரி காலத்திலே அவர் தனது பொதுவாழ்வை, 1969-ம் ஆண்டைய முஸ்லீம் லீக் மேடை ஒன்றில் துவங்கிவிட்டார். அதன்பிறகு மேற்பட்டிப்பிற்க்காக டெல்லி சென்ற அவர், ஐந்து துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பின் தமிழக அரசியலில் நேரடியாக களமாடினார்.
பழனிபாபாவின் குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாக இருந்தமையால்
அவருக்கு எம்.ஜி.ஆர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரின் மூலம் இந்திராகாந்தி அவர்களின்
நட்பும் அவருக்கு ஏற்ப்பட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான
அரசியலில் அவரை ஆதரித்துச் செயல்பட ஆரம்பித்தார். அன்றைய தினம் எம்.ஜி.ஆர் அவர்கள்
அ.தி.மு.க-வை ஆரம்பித்த வேளை அவருக்கு மிகவும் நெருக்கடிக்கள் அரசியல் ரீதியாக ஏற்ப்பட்டது.
மேலும், அவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், கூட பெரிய சவாலுக்கு உள்ளானது.
இந்த தருணங்களில்தான் பழனிபாபா அவருக்கு மிகவும் உதவினார். பின்னர் காலப்போக்கில் பழனிபாபா,
எம்.ஜி.ஆரால் ஏமாற்றப்பட்டார்.
இந்து முன்னனி எனும் அமைப்பை எம்.ஜி.ஆர் முன்னின்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும், அதனை பாபா எதிர்த்ததும், பின்னர் இதற்க்காக சென்னை கோட்டைக்குள் நுழைய பாபாவிற்கு தடை என்கிற அரசானை அறிவுப்பும், பழனிபாபாவை பலரும் திரும்பி பார்க்க வைத்தது எனலாம்.
ஒருமுறை, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, கலைஞர்.கருணாநிதி அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் சில புகைப்படங்களைக் காட்டி, முதலமைச்சரின் மூக்கின் நேராக விரல் நீட்டி பேசும் அளவிற்கு இவருக்கும், முதல்வருக்கு என்ன நெருக்கமென கேள்வி எழுப்பினார். அந்த சட்டமன்ற விவாதத்தினோடு, அந்த புகைப்படமும் சேர்ந்து மறுநாள் நாளேடுகளில் வெளியானது. அதில் பழனிபாபா, எம்.ஜி.ஆரின் மூக்கின் நேராக விரல் நீட்டி கேள்வி எழுப்பும்படியாக இருந்தது. இதுவும் மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளாகி பழனிபாபாவை திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆருடன் முரண்பட்ட பழனிபாபா அவரிடமிருந்து வெளியேறினார். பழனிபாபாவின் ஆவேசப் பேச்சுக்களால், அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டார். இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட கலைஞர், பாபாவை தி.மு.க பக்கம் இழுத்துக் கொண்டார். 1985-களுக்குப் பிறகிலிருந்து அவர் 90 கால கட்டம் வரை தி.மு.க-விற்க்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்துள்ளார். இறுதியில், ‘ஹிந்துக்கு ஆபத்து, ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து’ எனும் விசமக் கருத்துக்களை பரப்பும் விதமான இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலய்யரால் எழுதப்பட்ட நூலிற்கு மறுப்பாக பழனிபாபா ஒரு நூலை எழுதினார், இந்த நூலை தடை செய்தது மட்டுமல்லாது, பழனிபாபாவை எட்டு மாதம் சிறையில் அடைத்தார் கலைஞர். இதன்பிறகு தி.மு.க-வினாலும் முதுகில் குத்தப்பட்டார் பழனிபாபா. இவர் எட்டு மாதம் சிறையில் இருந்த கால கட்டத்தில்தான், மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் நட்பு ஏற்ப்பட்டது. இதன் நீட்சியாக அவர் விடுதலையாகி வெளியே வந்ததும், வன்னியர் சங்கங்களை ஆதரித்தும், பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் களமாடினார்.
இந்து முன்னனி எனும் அமைப்பை எம்.ஜி.ஆர் முன்னின்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும், அதனை பாபா எதிர்த்ததும், பின்னர் இதற்க்காக சென்னை கோட்டைக்குள் நுழைய பாபாவிற்கு தடை என்கிற அரசானை அறிவுப்பும், பழனிபாபாவை பலரும் திரும்பி பார்க்க வைத்தது எனலாம்.
ஒருமுறை, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, கலைஞர்.கருணாநிதி அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் சில புகைப்படங்களைக் காட்டி, முதலமைச்சரின் மூக்கின் நேராக விரல் நீட்டி பேசும் அளவிற்கு இவருக்கும், முதல்வருக்கு என்ன நெருக்கமென கேள்வி எழுப்பினார். அந்த சட்டமன்ற விவாதத்தினோடு, அந்த புகைப்படமும் சேர்ந்து மறுநாள் நாளேடுகளில் வெளியானது. அதில் பழனிபாபா, எம்.ஜி.ஆரின் மூக்கின் நேராக விரல் நீட்டி கேள்வி எழுப்பும்படியாக இருந்தது. இதுவும் மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளாகி பழனிபாபாவை திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆருடன் முரண்பட்ட பழனிபாபா அவரிடமிருந்து வெளியேறினார். பழனிபாபாவின் ஆவேசப் பேச்சுக்களால், அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டார். இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட கலைஞர், பாபாவை தி.மு.க பக்கம் இழுத்துக் கொண்டார். 1985-களுக்குப் பிறகிலிருந்து அவர் 90 கால கட்டம் வரை தி.மு.க-விற்க்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்துள்ளார். இறுதியில், ‘ஹிந்துக்கு ஆபத்து, ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து’ எனும் விசமக் கருத்துக்களை பரப்பும் விதமான இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலய்யரால் எழுதப்பட்ட நூலிற்கு மறுப்பாக பழனிபாபா ஒரு நூலை எழுதினார், இந்த நூலை தடை செய்தது மட்டுமல்லாது, பழனிபாபாவை எட்டு மாதம் சிறையில் அடைத்தார் கலைஞர். இதன்பிறகு தி.மு.க-வினாலும் முதுகில் குத்தப்பட்டார் பழனிபாபா. இவர் எட்டு மாதம் சிறையில் இருந்த கால கட்டத்தில்தான், மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் நட்பு ஏற்ப்பட்டது. இதன் நீட்சியாக அவர் விடுதலையாகி வெளியே வந்ததும், வன்னியர் சங்கங்களை ஆதரித்தும், பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் களமாடினார்.
தொண்ணூறுகளிலிருந்து அவர் படுகொலை செய்யப்படும் சற்று முன்னர்
வரையிலான நாட்கள் வரை அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்காக மிகத் தீவிரமான பரப்புரையை மேற்க்கொண்டார்.
அன்று பா.ம.க ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட்ட ஒன்றாகத்தான் இருந்தது.
சமீபத்திய காலங்களில்தான் அது சாதிய அரசியலை முன்னெடுத்துள்ளது.
பழனிபாபா என்றதும் அவர் ஒரு இசுலாமியத் தலைவரென்கிற மட்டில்தான்
பலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் உண்மை அப்படியானதாக இல்லை. அவர் ஒடுக்கப்படும் அத்தனை
சமூகத்திற்க்காகவும், தனது வாழ்நாளின் இறுதிவரை போராடியவர். அந்நியப்படுத்தப்படும்,
தாழ்த்தப்படும் சமூகங்களின் விடியலுக்காகவும், வாழ்வுரிமைகளுக்காகவும் போராடியவர்.
இசுலாமிய தளத்தில் இருந்து வெளிப்பட்ட எந்த தலைவர்களும் இவரைப் போன்ற தெளிந்த அரசியல்
பார்வைகள் கொண்டவர்களாக இருந்ததில்லை. அதனால்தான் இவரின் அரசியல் நடவடிக்கைகள் பலதும்,
இசுலாமியக் கட்சிக்காரர்கள் சிலராலே அவ்வப்போது விமர்சிக்கப்படது.
‘மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் இந்த இந்து மதத்தின்
ஏற்றத் தாழ்வுகளை தாங்கிக் கொள்ளாது, இழிவு நீங்க இசுலாம் எனும் மார்க்கத்தைத்தான்
ஏற்றுக் கொண்டோமே தவிர, நாங்கள் அரேபியர்கள் அல்ல. நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள்.
ஆரிய பார்ப்பன கும்பல்களைப் போல வந்தேறிகளல்ல நாங்கள்” என பழனிபாபா பலமுறை கூறியுள்ளார்.
இசுலாமெனும் மார்க்கத்தைத்தான் இறக்குமதி செய்தோமே தவிர, நாங்களே இறக்குமதியானவர்களில்லை
என்றும் சொல்வார்.
இந்த தெளிவான புரிதல்களினால்தான் பழனிபாபா, பண்முகக் களங்களில்
களாமாடினார். வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டும் உழைக்காது, குரல் கொடுக்காது, ஈழத்
தமிழர்களுக்காகவும், தமிழ் தேசியத்திற்க்காகவும் போராடியவராக இருந்துள்ளார். தமிழக
மண்ணிலே ஈழத் தமிழர்களை ஆதரித்துப் முதன்முதலில் சீரடி அரங்கிலே கூட்டம் நடத்தியவர்
என்கிற பெருமைக்கும், அதற்க்காக 48-நாட்கள் சிறைப்பட்டவர் என்கிற தியாகத்திற்க்கும்
சொந்தக்காரர்தான் பழனிபாபா. இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறாகான நாட்களில் இங்குள்ள
பெரும் தலைவர்களெல்லாம், விடுதலைப் புலைகளைப் பற்றியோ, ஈழ மக்களுக்காகவோ பேச அச்சப்பட்டுக்
கொண்டும், சிலர் ஒழிந்து கொண்டும் இருந்த கட்டத்திலே பழனிபாபா துணிச்சலாக, விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவு, பிரபாகரனுக்கு ஆதரவு தருகிறேனெனப் பேசினார். மேலும் இராசீவ் கொலை
வழக்கில் அநீதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது,
கொலையில் காங்கிரசின் பங்கீட்டையும் அன்றே பேசியவர்தான் பழனிபாபா.
“அடிமைப்பட்டு கிடக்கும் சமூகத்திற்க்கு தனிநாடுதான் (தமிழ்
தேசியம்) தீர்வென்றால், அத்தகைய ஒன்றிற்க்காக நாமும் (இசுலாமியர்கள்) சேர்ந்து தியாகம்
செய்ய வேண்டியது நமது கடமை” என்ற வண்ணம் வெளிப்படையாக தனித் தமிழர் நாட்டிற்க்காக அன்று
ஆதரித்த ஒரே இசுலாமிய மதம் தாங்கிய தலைவர் இவர் மட்டும்தான். மறைந்த.காயிதே மில்லத்
அவர்கள் ஒருமுறை பாராளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென குரலெழுப்பியுள்ளார்.
மற்றபடி இனத்தின் அடிப்படையில் அரசியல் செய்த ஒரே இசுலாமியத் தலைவர் பழனிபாபா மட்டும்தான்.
இதனால்தான், பாவலரேறு.பெருஞ்சித்திரனார், நெடுமாறன், தமிழரசன்,
விடுதலைப் புலிகள் தலைவர்.பிரபாகரன், போன்ற தமிழ் தேசிய போராளிகளுடனும், மருத்துவர்.இராமதாஸ்,
மருத்துவர்.சேப்பன், தலித் எழில்மலை, பேரா.தீரன், பேரா.கல்யாணி, பேரா.அ.மார்க்ஸ், தொல்.திருமாவளவன்,
ஜான்பாண்டியன், பசுபது பாண்டியன் போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான அரசியலை முன்னெடுப்போர்களின்
உடனுமே அதிகம் பயணித்தாரே ஒழிய, வெறுமனே இசுலாமியர்கள் என்கிற மட்டில் அவர் என்றுமே
சுருங்கியதில்லை. இவரின் இன்னொரு அரசியலானது மிகவும் கூர்நோக்கிய பார்வை கொண்டது. இன்று
இங்கு தலித்துகளுக்காக பேசுபவர்கள், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்காக குரலெழுப்புவதில்லை.
அதேபோல பிற்ப்படுத்தப்பட்டோருக்கான அரசியல் செய்வோர் தலித்துகளுக்காகவோ, சிறுபான்மையினருக்காகவோ
பேசுவதில்லை. ஆனால் பழனிபாபா என்கிற அரசியல்கர்த்தா, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும்
அத்துனை சமூகங்களையும் ஒன்றிணைத்து, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியவராக இருக்கின்றார்.
மத நல்லிணக்கம் என்பது இயலாதது, சமூகங்களிடையே நல்லிணக்கம்தான் சாத்தியம் என்கிற புரிதலையும்
கொண்டிருந்தார்.
இவர் மீது வன்முறையாளர், தீவிரவாதி என்கிற ஒரு பொதுச் சித்திரம்தான்
இன்று இம்மண்ணில் வரையப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவாரங்களின் ஒப்பாரிகள்தானே
ஒழிய வேறொன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு என்றுமே நேதாஜி அவர்கள் தீவிரவதிதான்,
பகத்சிங் தீவிரவாதிதான். அந்த வகையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பழனிபாபா
தீவிரவாதிதான். உயர்திரு.பெரியார் அவர்கள் இம்மண்ணில் பார்ப்பனியத்திற்கு எதிராக எவ்வாறு
களமடினாரோ, அதேபோன்றதொரு களத்தைத்தான் பழனிபாபாவும் பார்ப்பனர்களுக்கு எதிராக முன்னெடுத்தார்.
பெரியாரையும், அம்பேத்கரையும் மிகவும் உயர்த்திப் பிடித்தவர் பழனிபாபா.
“புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?, ஹிந்துக்கு ஆபத்து ஹிந்துஸ்தனத்திற்கு
ஆபத்து – இராமகோபாலய்யருக்கு மறுப்பு, WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI
MASJID?,போன்ற
புத்தகங்களையும்” “அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி’ போன்ற பத்திரிக்கைகளையும்
நடத்தினார்.
புனித பைபிளில் உள்ள பல முரண்பட்ட கருத்துக்களை சில மேடைகளில்
பேசியுள்ளார். அதேசமயம் அவர் கிருத்துவ புனித நூலில் உள்ள முரண்பாடுகளைத்தான் சாடினாரே
ஒழிய கிருத்துவர்களை அல்ல. ஒருமுறை ஈரோட்டில் தலித் கிருதுவர்கள் தேவாலத்தியத்திற்க்குள்
நுழைய அனுமதி மறுக்கப்பட்டதனை அறிந்தவர், உடனே அங்கு சென்று தேவாலயத்தின் முன்பு நுழைவுப்
போராட்டம் நடத்தியவராகவும், தலித் கிருத்துவர்கள் செல்ல சிறைப்பட்டவராகவும் இருந்துள்ளார்.
மேலும் பழனிபாபா என்றதும் இன்னொரு பிம்பும் திட்டமிட்டு பரப்படும்.
அது அவர், செல்லும் இடமெல்லாம் இந்துக்களை மதமாற்றம் செய்தார் என்கிற குற்றச் சாற்றாகும்.
ஆனால் உண்மை என்னவெனில், பழனிபாபாவினோடு பல ஆண்டுகள் உடன்பயணித்த மருத்துவர் சேப்பன்
தன்னுடைய நூல் ஒன்றிலே குறிப்பிடுகிறார், பாபா ஒருபோதும் இசுலாத்திற்கு அழைக்கமாட்டார்,
அவர் இசுலாத்தின் மாண்புகளை மட்டும்தான் பேசுவார். அதில் தெளிவுபெற்றவர்கள் இசுலாத்தினை
மேடைக்கே வந்து ஏற்றுக் கொள்வர். இத்தனை ஆண்டுகள் உடனிருந்து என்னைக் கூட அவர் இசுலாத்திற்கு
அழைக்கவில்லை, மாறாக மாண்புகளைக் கூறியுள்ளார், என்கிற வண்ணம் பதிவு செய்துள்ளார்.
இது இந்துத்துவச் சக்திகள் பழனிபாபாவின் மீது தூற்றும் இன்னொரு பழி சொல்லுக்கான தெளிவான
உண்மையான பதிலடியாகும்.
இறுதியாக பழனிபாபாவின் மீது இசுலாமிய மற்றும் பொதுச்சமூகங்களின்
விமர்சனங்களானது, ‘அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்தார் என்பதும், தனக்குப் பின், தன்னுடைய
பார்வையில் பின் தொடரும் தேர்ந்த தலைமைகளை உருவாக்காமல் சென்றுவிட்டார் என்கிறவைகள்தான்.
இது இரண்டுமே அவருக்கு இயலாத காரியமாக போயிற்று. தொடர்ந்து கூட்டம், சிறை, வழக்கு,
பாதுகாப்பற்ற சூழல், மேலைநாட்டுப் பயணங்கள், இப்படியாக அவரின் பொதுவாழ்வு மிகவும் துன்பகரத்திற்க்குள்ளானதாக
இருந்துள்ளது. மேலும் இன்னொன்று அவர் ஒரே ஒரு இடத்தில் இமானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டதில்
பசும்பொன் தேவர் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று பேசியுள்ளார். இது பழனிபாபாவின்
மீது ஒரு சின்ன சங்கடத்தை சிலருக்கு ஏற்ப்படுத்தும் விதமாக இருக்கலாம். ஆனால் அவர்
இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டது அநீதியென்றும், அவர் ஒடுக்கப்படும் சமூகங்களுக்காக
போராடியவர் என்பதிலும் மாற்றுக் கருத்து கொண்டவரல்ல.
தனது வாழ்நாளில் 5147 மேடைக் கூட்டங்களில் பேசியும், 137 வழக்கும்,
125முறை சிறையும், அதில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில். மூன்று முறையும், தடா சட்டத்தில்
ஒருமுறையும் அடங்கும். இந்திய வரலாற்றிலேயே சிறைக்கே செல்லாமல், வெளியில் இருந்து கொண்டே
நீதிமன்றத்தின் மூலம் தடா வழக்கை முறியடித்த வரலாறு பழனிபாபாவிற்கு மட்டுமே உண்டு.
வழக்கறிஞர்களில் இவர் அளவுக்கு வழக்குள், சிறைகள் கண்டவர்களும் இங்கு கிடையாது. மேற்ப்படி
137 வழக்குகளிலும் நிரபராதியாக, குற்றம் நீருபிக்கபடாமலே விடுதலையாகி உள்ளார் என்பதும்
குறிப்பிடத் தக்கது.
இசுலாமியக் களம், தமிழ் தேசியக் களம், ஈழத்தமிழர்கள், விடுதலைப்
புலிகள் ஆதரவு, தேசிய இனச் சிக்கல்கள், வட இந்தியத் தமிழர்களுக்கான குரல், பிற்ப்படுத்தப்பட்டோர்,
தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான அரசியல், இன ரீதியான அர்ப்பணிப்பு, மொழிப்பற்று,
இடுக்கிற்க்குள்ளாகும் உலக அளவிலான இனத்திற்க்கான குரல், பார்ப்பானிய எதிர்ப்பு, ஏகாதிபத்தியச்
சாடல், தான் சார்ந்த சமூகத்தின் மேல் இருக்கும் குறைகளையும் பொது வெளியிலயே சுய விமர்சனம்
செய்யும் பாங்கு என பண்முகக் களங்களில் பேசி, போராடி மாய்ந்தவர் பழனிபாபா.
இறுதிவரை பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.இராமதாஸை எவ்வளவோ
நம்பி பிறகு அவராலும் ஏமாற்றப்பட்டார். அதனால்தான் அவர் 1996 சட்டமன்றத் தேர்தலோடு
பா.ம.க-விற்க்கான இறுதி ஆதரவை நிறுத்திக் கொண்டார். இதன்பின்னர் தன்னுடைய கருத்தியலின்
மூலம் தானே ஒரு அரசியல் கட்சியினை தொடங்க திட்டமிட்டு ஆவேசப் பேச்சுக்களைத் தவிர்த்து
விவேக நடவடிக்கைகளில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் அவர் பொள்ளாச்சியில்
தனது நண்பர் தனபாலின் வீட்டில் இருந்து வெளியேறி தனது ஜீப்பில் ஏற முயலும் தருணத்தில்,
இரவு ஏழு, ஏழரை மணியளவில், ஜனவரி 28, 1997-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினாரால் படுகொலை செய்யப்பட்டார்.
வரலாற்றில் பழனிபாபா என்பவர், பல கட்சிகளை நம்பி ஏமாந்தவராக
உள்ளார். தன்னுடைய சமூகத்திற்கு, இனத்திற்கு, ஒடுக்கப்படுதலில் இருந்தும், அந்நியப்படுத்தப்படுதலில்
இருந்து ஒரு விடிவை வேண்டியே அவர் அரசியல் கட்சிகளை ஆதரித்தார். ஆனாலும் அவர் ஒருபோதும்
எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராகக் கூட இருந்திருக்கவில்லை. மக்களின் நலனுக்காகா கட்சிகளை
நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை மக்களே விழிப்புணர்வு கொள்
என்றுதான் சொல்வேனே தவிர, மரணம் வந்துவிட்டதே என அஞ்சிடப் போவதில்லை, இலட்சியவாதிகளுக்கு
ஏதடா மரணம்? என முழக்கமிட்டபடியே வாழ்ந்தவர்.
எதிரிகளின் கைகளால், வெட்டுப்படுச் சாகும் வீரமரணம்தான் வேண்டுமென
மேடைகள் தோறும் அவர் வேண்டியபடியே, அவர் இத்தேசத்தின் நாசகரச் சக்திகளின் கைகளால்
16 வெட்டுக்கள் சரமாரியாய் தாங்கி குடல் சரிந்து வீர மரணத்தை எய்து, ஆயக்குடி மண்ணிலே
விதையாய் புதைக்கப்பட்டுள்ளார்.
தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படுவோருக்கும், பிறப்பால்
இழிபழி சுமத்தி தாழ்த்தப்பட்டோருக்கும், பேரினவாதிகளால் சூறையாடப்படும் சிற்றினத்தாருக்குமான
சம அந்தஸ்துடைய வாழ்வாதரங்களை முன் வைத்து சுழன்ற வாழ்வுரிமைப் போராளி பழனிபாபா.!
நன்றி : கலகம் மாத இதழ்
(மே-2014 கலகம் இதழில் வெளியான கட்டுரை இது)
மேலும் இதனை இணைய இதழில் வெளியிட்ட புனிதப் போராளிக்கும் நன்றி!
தளம் : http://punithaporali.com/?p=165
தோழமையுடன்
பழனி ஷஹான்

No comments:
Post a Comment