நஞ்சை விரும்பி உண்போர்
நம்மில் எவருமுண்டோ ?
இருந்தும் ஏனோ
சாதியைக் கைவிட மறுக்கின்றோம்
எங்கிருந்தோ வந்தான்
புகலிடம் ஒன்று பெறுவதற்காக
பூஜை புனஸ்காரம் என்று
நம்மை குழப்பியும், கூட்டங்களாய் பிரித்தும்
நம் வீட்டு கூரையில் ஏறி
தான்தான் உயர்ந்தவன் என்றான்
இவன் சதி
வெகுநாள் வெல்லாது என்பதாலே
சாதி எனும் சவக்குழியினை
நாம் அறியா வண்ணம்
நம் மத்தியிலே உண்டுபண்ணிவிட்டான்
அய்யோ இந்துக்களுக்கு
ஆபத்து என்றார்
இராமகோபாலய்யர்
அய்யஹோ
! வன்னிய குல மங்கைகள்
மயக்கப்படுகிறார்கள்
என்கிறார்
இராமதாஸ்
இந்த
இரு கூப்பாட்டிலும் உள்ள
பொது
விதி என்ன தெரியுமா ?
தலித்தும்,
தாழ்த்தப்பட்டவனும்
தரணியில்
வாழ்ந்து
விடக் கூடாதென்பதற்கானது அல்ல
தரணி
ஆண்டு விடக் கூடாதென்பதற்கானது !
புரட்சிக்
கவி பாரதியும்
பகுத்தறிவுப்
பகலவன் பெரியாரும்
வாழ்ந்து
மறைந்த
இப்புகழ்
தமிழ் மண்ணில்தான்
வாழ்ந்தானா
இளவரசன் ?
காதல்
எங்குள்ளதோ
அங்குதான்
வாழ்க்கை உண்டென கூறிய
காந்தியார்
வாழ்ந்த நாட்டில்தான்
காவு
கொடுக்கப்பட்டானா இளவரசன் ?
அன்பையும்,
சமத்துவத்தையும்
தங்களின்
இறுதி மூச்சு வரை போதித்த
புத்தரும்,
இயேசுவும், முகம்மதுவும்
உதித்திட்ட
இந்த உலகத்தில்தான்
உயிரை
விட்டானா இளவரசன் ?
ஆம்
அவன்
இந்த மண்ணில்தான் வாழ்ந்தான்
அவன்
இந்த நாட்டில்தான் காவு கொடுக்கப்பட்டான்
அவன்
இந்த உலகத்தில்தான் உயிரை விட்டான்
உயிராய்
ஒருவளை நேசித்து
அன்பின்
அகிலமாய் அவளை பாவித்து
இதயப்
பரிசளிப்பான காதலை
அவள்
மீது கொண்டதனால்
அவளொன்றும்
சளைத்தவளில்லை அவனுக்கு
தன் குலமும்
பின் குடும்பமும் எதிர்த்தும்
தன் தந்தை
இறந்தது தெரிந்தும்
துணிவோடு
துணையவனோடு
திருமணம்
புரிந்து வாழ்ந்தவளவள்
இந்த
அன்பு கலப்பிற்கு ஆரம்பத்திலே
எதிர்த்து
நின்றிட்ட சாதி வடிவச் சாத்தான்
சக்திகளற்று
தோற்றுவிட்டான்
சத்திய
காதலின் முன்பு
நேரெதிர்
நின்று தோற்ற சாதிச் சாத்தான்
பற்பல
சூழ்ச்சிகளைத் தொடர்ந்து
பாவையவள்
உள்ளத்தை திரித்து
காளையவனை
தனிக்க வைத்து விட்டான்
தனித்து
நின்றிட்ட
நிழல்
இழந்த காளையனை
கயவர்கள்
பாசக் கயிற்றால் வேட்டையாடி
கல்லறைக்கு
அனுப்பிவிட்டனர்
மண்ணறைக்குள்
மறைந்துவிட்டவன்
நமக்கோர்
மதி நுட்பத்தை
மாயமாய்
கூறிவிட்டிருக்கிறான்
சாதியக்
காட்டேரியை
தனியொருவனாய்
எதிர்த்து
இத்துனை
நாட்கள் போரிட முடியுமெனும்போது
நம்மில்
பலர் கூட்டாய் குரல் கொடுத்தால்
என்ன
நேரிடும் ?
தெளிவு
பெற்ற இரு ஆடுகளுக்கிடையில்
மாட்டிக்
கொண்ட நரியினைப்
போலல்லவா
ஆகிவிட
மாட்டார்கள்
சாதியம்
வளர்த்திடும் அயோக்கியர்கள் ?
சாதிய
சங்கங்களின் கதவுகளுக்கு
பூட்டிடாத
வரையில்
நீ புண்பட்டுக்
கொண்டுதான்
இருப்பாய்
உன் கையில்
சாதியக் கொடியினை தந்திடும்
தலைவர்களின்
கரங்களுக்கு
விலங்கிடாத
வரையில்
நீ விளையாடப்பட்டுக்
கொண்டுதான் இருப்பாய்
சத்ரியன்,
சூத்திரன் எனும் இழிசொல்லை
வர்ணாஸ்சிரம
சட்டத்தால் உருவாக்கிட்ட
வந்தேறிகளை
தனிமைப்படுத்தி
விரட்டியடிக்கா
வரையில்
நிச்சயம்
நமக்கிங்கு விடியல் இல்லை
கடவுள்
மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்
மந்திரம்
பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது
எனக்
கூறி
பயமுறுத்திடும்
விஷப் பாம்புகளுக்கு
கடவுள்
அன்பிற்கு கட்டுப்பட்டவர்
அன்பு
அநீதிக்குள்ளாக்கப்பட்டோர்க்கும்
ஏழைகளுக்கும்,
அபழைகளுக்கும் கட்டுப்பட்டது என
புரிய
வைத்திடு நீ
எப்படியெனில்
அவ்விஷப்
பாம்புகளுக்கு
விளங்க
வைப்பது
எப்படியெனில்
உன் கடவுளை
நீ தரிசிக்க
நீ வழிபட
இடைத்தரகராய்
எவனும் தேவையில்லையென
அவனை
உதறித் தள்ளி,
அகிலம்
படைத்த கடவுள்
அனைத்து
மொழியும் அறிந்தவரென
அவனுக்கு
பார்ப்பனன் அவனுக்கு
அறிவுறுத்தி
விளங்க
வைத்திடு
சாதியத்திற்கு
வழி வகுக்கும்
கொடிய
பல கடவுள்களையும்
மிருக
மனிதர்களையும்
ஒன்றாய்
சேர்த்து தள்ளிவிடு
அவர்களாகவே
தயாரித்த சாதியெனும்
நடமாடும்
ஓர் சவக்குழிக்குள்ளே
அந்த
இளவரசனின்
கல்லறை
மேல் ஓர்
வெள்ளை
மலரைத் தூவி
சத்தியம்
ஏற்ப்போம்
அன்புக்
கலப்பில் உள்ளங்களை
அதிகமதிகம்
இணைத்துக் கொண்டு
ஆயிரம்
ஆயிரம் ஆன்மாக்களை
உருவாக்கிடுவோம்
சாதியம்
அழித்து
ஓர் புது
இனம் படைப்போம்
புனிதக்
கருத்தரித்தல்கள் மூலம்…!
(இளவரசனைக் கொன்றது சாதியா ? காதலா ? எனும் தலைப்பில் திருப்பூர் பதியம் நடத்திய பாவரங்கத்தில் இடம்பெற்ற எனது கவிதை இது)
தோழமையுடன்
- பழனி ஷஹான்
