Sunday, 30 November 2014

பழ.நெடுமாறன் உடன் சந்திப்பு - பழனி ஷஹான்



                    புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் பயணத்தில், தமிழ்தேசிய தளத்தில் பரவலாக செயல்பட்டுவரும், மூத்த அரசியல்வாதி அய்யா பழ.நெடுமாறன் (NEDUMARAN.PALA) அவர்களை கோவையில் சந்தித்தேன்.
(பழ.நெடுமாறன் அவர்களுடன் பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN PALA.NEDUMARAN)

கடந்த ஆகஸ்ட் மாதம், 11-ம் தேதி, கோயம்புத்தூரில் அய்யா நெடுமாறன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பழனிபாபாவிற்கும் அவருக்குமான தொடர்புகள், சிறை சந்திப்புகள், மேடை அனுபவங்கள், இவைகளைத் தாண்டி தமிழீழ மற்றும் விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களுடன் பழனிபாபாவிற்கு இருந்த தொடர்பும் என, பல விடயங்களைக் கேட்டுத் தொடர்ந்தேன்.

இவை தவிர, பழனிபாபா குறித்தான கட்டுரையையு, மேலும் பல கேள்விகளையும் முன்வைத்து அவருக்கு ஒரு கடிதம், (அவரே அனுப்பக் கேட்டு கொண்டபடியால்) அனுப்பி, பதில்களைப் பெற்றேன். விரைவில் வெளிவர இருக்கும் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில், பல எதிர்பாரத அரசியல் அதிர்வலைகள் தவிர்க்க இயலாதது என்பதனை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.

குமரி மற்றும் நெல்லை பயணமும்: கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் அவர்களுடனான சந்திப்பும்


(கன்னியாகுமரி செல்லும் வழியில்)

26.09.2014 வெள்ளி அன்று பழனியிலிருந்து கிளம்பியது எங்களது பழனிபாபாவின் வாழ்வை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான மற்றும் நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாய் அமைந்த மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட மாவட்டங்களை உள்ளடக்கிய பயணம்.

வெள்ளி இரவு மதுரையை அடைந்த நானும், தோழர்.உமர்கயான் அவர்களும், அங்கு குருஜெயச்சந்திரன் எனும் தோழரைச் சந்தித்து உரையாடினோம். அரைமணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற அந்த உரையாடலின் நடுவிலேயே தேநீர் உபசரிப்புகளும் நடந்து முடிந்தது. மதுரையில் உள்ள ஆதீணம் அருணகிரிநாதர் அவர்களுடனான எங்களின் சந்திப்பை, குருஜெயச்சந்திரன் அவர்களின் மூலமாக உறுதிசெய்துவிட்டு, நாங்கள் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி பயணமானோம்.
(நெல்லையில் உமர்கயான், நான், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார்)

இரவு 10:30 மணி அளவில் நெல்லை மண்ணை அடைந்த எங்களை, சட்டக் கல்லூரி தோழர்.அலீஃப் மீரான் அவர்கள் வரவேற்று, உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அலீஃப் மீரான் அவர்களின் சொந்த ஹோட்டலில் இரவு உணவுகளை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அருகிலுள்ள ஒரு விடுதியில் (லாட்ஜ்) அறையெடுத்து தங்க ஏற்ப்பாடும் செய்து தந்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலை விடிந்ததும், நாங்கள் நெல்லை மாநகருக்குள்ளேயே சில சந்திப்புகளை ஏற்ப்பாடு செய்து இருந்தோம். அதற்க்காக வெளியே கிளம்ப இருந்த நேரம், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான லேனா குமார் அவர்கள், அறைக்கு வந்து எங்களைச் சந்தித்தார். இவர் வருவதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர், வழக்கறிஞர்.அப்துல் ஜப்பார் அவர்களும் அறைக்கு வந்து சந்தித்துச் சென்றார்.

வெளியே கிளம்புவதற்க்காக ஆயத்தமாகி, அறையை காலி செய்துவிட்டு வெளியேறினோம். நேரே மேலப்பாளையத்தில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த சிலரைச் சந்தித்துப் பேசினோம். அப்துல் ஜப்பார் அவர்கள் மேலும் சிலரை சந்திக்க ஏற்ப்பாடு செய்திருந்தார், அவர்களின் காலதாமத்தால் எங்களால் அவர்களை சந்திக்க நேரமில்லாமல், உடனே அங்கிருந்து வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடிக்குப் பயணமானோம்.
(தமுமுக மாநில நிர்வாகிகளான அப்துல் சமது மற்றும் தமீமுன் அன்சாரி, உமர்கயான் மற்றும் பழனி ஷஹான்)

(நான், அப்துல் சமது மற்றும் உமர்கயான்)

ஏர்வாடிக்கு மதியம் 2  மணி அளவில் சென்றடைந்த நாங்கள், அங்கு தமுமுக மாநில அமைப்பினர் ஒருவரின் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு, மேலும் மதிய உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டோம். அங்கு தமுமுக மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான, பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களையும், தமுமுக மாநில தலைவரான திரு.ஜே.எம்.ரிபாஃபி, அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி உள்ளிடோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து நாங்கள் கன்னியாகுமரி பயணமானோம்.
(கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களுக்கு சால்வை அணிவிக்கையில் உடன் உமர்கயான்) 
மாலை 4:30 மணி அளவில்
கன்னியாகுமரி சென்றடைந்த நாங்கள் அங்கு, பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள, 'அமைதி இல்லத்தில்' பண்முகப் போராளியான மதிப்பிற்குரிய கொடிக்கால் செல்லப்பா எனும் கொடிக்கால் சேக் அப்துல்லா அவர்களை சந்தித்து உரையாடினோம். ஒரு ஆத்திகராக, கம்யூனிஸ்ட்டாக பிறகு இசுலாமியராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சமூக விடுதலைக்கான போராட்டை முன்னெடுத்துக் கொண்டுவருபவரும், இலக்கிய உலகில் தனியொரு ஆளுமையை பெற்றவரும்தான் கொடிக்கால் அவர்கள். அவருக்கும் பழனிபாபாவிற்கு இடையேயான சந்திப்புகள், தொடர்புகள், அரசியல் பேச்சுக்களை முழுமையாக கேட்டறிந்துவிட்டு, மாலை 6:30 மணி அளவில் கன்னியாகுமரி கடற்கரைக்கு அவரோடு சென்று, மேலும் பல சுவாரசியமான விடயங்களை பேசிக் கொண்டோம்.
(கொடிக்கால் அவர்களோடு பழனி ஷஹான்)
PALANI SHAHAN WITH AN KODIKKAL SHEIK ABDULLA)

இந்த சந்திப்பின்போது, கொடிக்கால் அவர்கள் தன்னுடைய கடந்து வந்த பயணங்களை முழுமையாக விளக்கிப் பேசினார். தலித் சமூகத்தில் பிறந்தது, இந்து மதத்தின் தீண்டாமையில் உழன்றது, அதிலிருந்து வெளியேறி பகுத்தறிவு பெற்று ஆத்திகராய் வலம் வந்தது, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல பகுதிகளுக்கும் பயணித்தது, மாநில பொறுப்புகளில் இருந்தது, தா.பாண்டியன், நல்லக்கண்ணு அய்யா ஆகியோருடன் இருந்து களம் கண்டது, திமுக தலைவர் கலைஞர் உடனான நட்பு, பிறகு தீண்டாமையில் இருந்து எப்படியும் வெளியேறி, தன்மானம் அடைந்தே தீர வேண்டும் என்கிற தனது தீர தேடுதலின் இறுதியாக இசுலாத்தை ஏற்றது, இன்றளவும் தூய இசுலாமியர் இருந்து களம் கண்டு வருவது, கலை, இலக்கியத் தடத்தில் ஆளுமை செலுத்தியது, கலைஞரிடமிருந்தும், திருமாவளவன் அவர்களிடமிருந்தும் என தான் வாங்கிய பல விருதுகளையும் காண்பித்தவர், எங்களுக்கு அவர் எழுதிய "புறப்படுங்கள் இசுலாத்தை நோக்கி" என்கிற பரவலாக அதிர்வலைகளை ஏற்ப்படுத்திய, பல மொழிகளிலும் மொழி செய்யப்பட்ட புத்தகத்தின் ஆங்கில பதிப்பை பரிசாக வழங்கினார்.
(உமர்கயான் அவர்கள் கொடிக்காலிடமிருந்து புத்தகத்தினை பெறும்போது)

தொடர்ந்து கொடிக்கால் அவர்களோடு, பழனிபாபாவிற்கும், அவருக்குமான பல விடயங்களைப் பேசிவிட்டு, மேலும் கடற்கரையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக செலவழித்துவிட்டு, நாங்கள் நாகர் கோவில் அருகே உள்ள திட்டுவிழை எனும் ஊருக்கு பயணமானோம். இந்தப் பயணத்தில் எங்களோடு நாகர்கோவில் வரை, கொடிக்கால் அவர்களும் வந்தார். நாகர்கோவில் வந்ததும் இறங்கிய அவர் மேலும், சில நிமிடங்கள் நின்றபடியே பேசிவிட்டு, ஆட்டோ ஒன்றைப் பிடித்து அவரது வீட்டிற்கு புறப்படத் தயாரானார். எங்களின் வருகையையும், சந்திப்பையும் குறித்து பலமுறை தனது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்ள அவர் மறக்கவே இல்லை. எங்களைவிட்டு பிரிய முற்ப்படும்போதும் அவர் தனது மகிழ்வை தெரிவித்துக் கொண்டு, மேலும் தொடர்ந்து களத்தில் பயணிப்போம் எனவும் உற்சாகத்தை அளித்துவிட்டு பிரிந்தார். அவரை பிரியாவிடையோடு அணுப்பிவிட்டு நாங்கள் திட்டுவிழைக்கு பயணமானோம்.
(கொடிக்கால் அவர்களோடு கன்னியாகுமரி கடற்கரையில் நான்)
(கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலயத்தில்)

நாகர்கோவிலி கொடிக்கால் அவர்களை சரியா 8:15 மணிக்கு பிரிந்து பயணமான நாங்கள், சரியாக 9:20 மணி அளவில் திட்டுவிழையை அடைந்தோம். காலையிலிருந்தே எங்களது வருகையை எதிர்பார்த்து, மதிய உணவும் தயார் செய்து காத்திருந்த அண்ணன் தமிழரசன் அப்துல்காதர் அவர்களை நாங்கள் இரவில்தான் சந்திக்க நேர்ந்தது. 

(திட்டுவிழை நுழைவில்)

காலையிலிருந்து காந்திருந்த தமிழரசன் அப்துல் காதர் அண்ணன், எங்களைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்றார். உடனே அருகிலிருந்த தேநீர் கடையில், நேநீர் வாங்கிக் கொடுத்த அவர், உடனே எதிரே உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர்கள் ஊரில் புரோட்டா உட்பட எல்லா உணவுவகைகளும் அருமையாக இருக்கும், இதுதான் எங்களூரின் சிறப்பு என்று கூறிக் கொண்டே, பலவிதாமான உணவுகளை எங்களுக்கு வரவைத்தார். உண்மையில் சாப்பாட்டில் நானும் சரி, உமர்கயானும் சரி மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் உள்ளவர்கள். எங்களிடத்தில் சாப்பாட்டை குவித்து வைத்து சாப்பிடச் சொல்லி அன்புக் கொடுமை செய்துவிட்டார் அவர். நாங்கள் அதிகாமக சாப்பிடும் சாப்பாட்டின் அளவு புரோட்டா எனில் மூன்று, தோசை எனில் இரண்டு, இட்லி எனில் நான்கு எனத்தான் இருக்கும். இதைத்தாண்டி எங்கள் வயிறு 'நோ எண்ட்ரி" அறிகுறியை வெளிப்படுத்திவிடும், அப்படிபட்ட எங்களுக்கு விருந்து எனும் பெயரில் டேபிள் முழுவதும் உணவை பரப்பி வைத்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு சிரமப்பட்டிருப்போம், பட்டோம்.
(உமர்கயான் மற்றும் தமிரசன் அப்துல்காதர்)

ஹோட்டலில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணி அளவில் அவரின் வீட்டிற்குச் சென்றடைந்தோம். அங்கு தேநீர், பழங்களின் கலவையாக ஒரு இனிப்பு பண்டத்தையும் கொடுத்தார்கள், மிகவும் சிரமப்பட்டு தள்ளிக் கொண்டிருக்க, வாழைப்பழங்கள் வந்தன. மெது,மெதுவாக அவைகளை உட்கொண்டுவிட்டு, அப்படியே கதைக்கத் தொடங்கினோம். இரவு 3 மணி வரை கதைப்பு ஓடி இருக்கும். பலவகையான அரசியல் நிகழ்வுகளைப் பேசிவிட்டு அயர்ந்துபோனோம்.
மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முழித்த எங்களை அழைத்துக் கொண்டும் வாய்க்காலுக்குச் சென்றார் அப்துல் காதர். வாய்க்கால் கரை அருகே இருந்த வேப்ப மரத்திலிருந்து குச்சிகளை ஒடித்து அதனைக் கொண்டு பல் துவக்கினோம். அடுத்ததாக நீர் நிரம்பி ஓடும் வாய்க்காலுக்குள் குடித்து ஆட்டம் போட்டு, குளித்து முடித்தோம். சுற்றிலும் மலைத் தொடர்கள், வயல் வெளிகளில் அப்படி ஒரு பசுமை, கேரளத்தின் மொத்த சாயலில் தென்னந்தோப்புகள் என ஒரே இயற்கைத் திருவிழாவாக இருந்தது. இப்படியான ஒரு விடயத்தை அணுபவித்து எவ்வளவோ ஆண்டுகளாகியிருந்தது.
(உமர்கயான், தமிழரசன் அப்துல் காதர், பழனி ஷஹான்)

உடல் தேகம் சில்லிட்டுப் போன குளியலை முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். வீட்டிற்குள் நுழைந்ததும், அடுத்து கிளம்புவதற்க்கான பணிகளில் தீவிரமானோம். காலை 7:30 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டோம். புறப்பட்டுக் கொண்டிருந்த எங்களை இருக்கச் சொல்லி, அப்துல் காதர் அண்ணனும் சரி, அவரின் துணைவியாரும் சரி பலமுறை சொல்லிவிட்டார்கள். ஆனால் என்ன செய்ய எங்களின் நேரமிண்மை அப்படி இருந்தது. காலையில் அரபு கல்வி கற்ப்பதற்க்காக பாடசாலைகளுக்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த, அவரின் பிள்ளைகளிடம் சிறிது நேரத்தை கழித்துவிட்டு, காலை உணவில் கையை வைத்தோம்.
(தமிழரசன் அப்துல் காதர் அவர்களின் பிள்ளைகளுடன்)

எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு பெரிய தட்டில் சோற்றை வைத்து உணவருந்தினோம். இதுவும் பல காலங்கள் ஆகிப் போயிருந்த சில நினைவுகளை, அந்த நேரத்திலேயே ஈர்த்து தந்தது. உணவை சாபிட்டு முடித்ததும், கொடுக்கப்பட்ட நேநீரைக் குடித்துவிட்டு, அவர்களிடமிருந்து பிரியா விடையைப் பெற்று, பலமுறை இருக்கச் சொல்லிய வற்ப்புறுத்தல்களைக் கடந்து, எங்களது பயணம் நெல்லையை நோக்கியது.

காலை 10 மணி அளவில் நெல்லை பாளையங்கோட்டைடை அடந்த நாங்கள், அங்கு, "தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின்" தலைவர் திரு.ஜான்பாண்டியன் அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் சந்தித்தோம்.


பழனிபாபா அவர்களுக்கு ஜான்பாண்டியன் அவர்களுக்குமான நினைவுகளை கேட்டு பதிந்து கொண்ட நாம் அங்கிருந்து கிளம்பினோ. (இந்த சந்திப்பு குறிப்பு விரிவாக இதே வலைப்பூவில் எழுதியுள்ளேன்). நெல்லையிலிருந்து கிளம்பத் தயாரான எங்களை, இறுதியாக் அலீஃப் மீரான் அவர்கள் சந்தித்து, திருநெல்வேலி அல்வா பொட்டளங்களையும் அளித்து, விடை கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
மதியம் 1 மணி அளவில் நெல்லையில் இருந்து கிளம்பிய எங்களது பயணம், மாலை 6;30 மணி அளவில் பழனியை அடைந்தது. பழனியில் நான் எனது பயணத்தை முடிக்க, அதிலிருந்து கிளம்பிய உமர்கயான் அவர்கள் இரவு 8:30 மணிக்கு திருப்பூரை அடைந்து பயணத்தை முழுமையாக முடித்து வைத்தார்.

விரைவில் புரட்சியாளர்.பழனிபாபாவின் வரலாற்றை, பல அறியப்படாத சுவாரசியமான தகவல்களோடும், அதிர்வலைகளை தோற்றுவிக்கிற அரசியல் நிகழ்வுகளோடும், வைப்போம், என்கிற உறுதியில் நிறைவு செய்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.











ஜான்பாண்டியன் உடன் சந்திப்பு - A Meet With an JOHN PANDIYAN


(ஜான்பாண்டியன் மற்றும் பழனி ஷஹான்)
JOHN PANDIYAN AND PALANI SHAHAN)

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.ஜான் பாண்டியன் (JOHN PANDIYAN) அவர்களை, அவரது தமிழின வேந்தர் இல்லத்தில் நானும் (பழனி ஷஹான்), வழக்கறிஞர்.உமர்கயான் அவர்களும் சந்தித்துப் பேசினோம்.

பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றிற்க்கான எங்களது நீண்ட நெடிய பயணத்தின், 9-வது மாத பயணத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், ஜான்பாண்டியன் அவர்களின் பழனிபாபா உடனான வரலாற்றை பதிவு செய்து திரும்பினோம்.

அவர் எடுத்ததும், "சமூகப் புரட்சியாளர்" பழனிபாபா என்பவர் ஒரு சமூகப்புரட்சியாளர். என்னைப் போலவே, நான் எப்படி என் சமுதாய மக்களிடையே புரட்சியை ஏற்ப்படுத்திக் கொண்டுள்ளேனோ, அதேபோல இசுலாமிய மக்களிடையையேயும், தலித் மக்களிடையேயும் புரட்சியை ஏற்ப்படுத்தி, அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த புரட்சியாளர்தான் பழனிபாபா என்பவர் என பெருமைபட, நாங்கள் கேள்விகளை முன்வைக்காததற்கு முன்பாகவே, அவர் இதனைத் தெரிவித்தார்.

பிறகு அவருக்கும் பழனிபாபா அவர்களுக்குமான அரசியல் ரீதியான உறவுகளையும், போராட்டக் களங்களிடையேயான தொடர்புகளையும், மேடை மற்றும் சிறை வாழ்க்கைகளையும் அவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டோம்.
காவல்துறையினரின் கண்காணிப்பு, உளவுத்துறயினரின் கண்காணிப்பு இவைகளுக்கு மத்தியிலேயே தமிழின வேந்தர் இல்லத்திற்குள் நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் முகப்பில் உள்ள வரண்டாவில் அமர வைக்கப்பட்டு, தேநீர் கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு அரைமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு, நாங்கள் மேலே அழைக்கப்பட்டு, புகைப்படத்தில் உள்ள நீண்ட அறைக்குள் சென்றோம். அங்கு ஒரு 15 நிமிடங்கள் கழிந்த நிலையில், மீண்டும் தேநீர் கொடுக்கப்பட்டது. அதன் அடுத்த சில நிமிடங்களில் ஜான் பாண்டியன் அவர்கள், இந்த அறைக்குள் வந்து, நம்மோடு கைகுலுக்கிவிட்டு உரையாட ஆரம்பித்தார். இவரைச் சந்திக்க பலர் வந்து கொண்டிருந்தபடியால் இந்த நேர தாமதங்கள் தவிர்க்க இயலாததாக் ஆகிவிட்டதை தெரிவித்துக் கொண்டு, எங்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து அவரோடு அரைமணி நேரம் உரையாடிவிட்டு நாங்கள் அங்கிருந்து திரும்பினோம்.

திரு.ஜான்பாண்டியன் அவர்களுடனான சந்திப்பு, பழனிபாபாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எங்களின் முயற்சிக்கு மேலும் கூடுதல் உதவேகமாக அமைந்தது.
தோழமையுடன்
பழனி ஷஹான்



Friday, 28 November 2014

தொல்.திருமாவளவன் உடனான சந்திப்பு - A MEET WITH AN THOL.THIRUMAVALAVAN


                     
                                            புரட்சியாளர்.பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எமது தொடர்ச்சியான பயணத்தின் 12-வது மாதத்தின் ஒரு பகுதியாக, 23.11.2014 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுச்சித் தமிழருமான மேன்மையாளர் தொல்.திருமாவளவன் (THOL.THIRUMAVALAVAN) அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
(திருமாவளவன் அவர்களுடன்)

மாலை 6:30 மணி அளவில் வேளச்சேரி அலுவலகத்திற்க்குள், நான் தோழர்கள்.ஏஜாஸ் மற்றும் தமீம் அவர்களை உடன் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வந்திருக்கும் விடயத்தினை தெரிவித்தவுடன், எழுச்சித் தமிழரிடம் சென்று சொல்லிவிட்டு, மேலே அழைத்துப் போய் அமர வைத்தார்கள். சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு, எழுச்சித் தமிழரின் அழைப்பு வர உள்ளே சென்றோம்.
உள்ளே சென்றதும் எங்களை வரவேற்று, அமரச் செய்து, அரை மணிநேர காத்திருப்பு செய்தமைக்கு தனது வருத்ததினைத் தெரிவித்துக் கொண்டு, பேச்சைத் தொடர்ந்தார். நான் வந்திருக்கும் விடயத்தினை விளக்கிச் சொன்னதும், அவைகளைக் கேட்டுக் கொண்டு, பழனிபாபா அவர்களுக்கும் தனக்குமான சில நினைவுகளைப் பகிர்ந்தார் எழுச்சித் தமிழர். மேலும் அன்றிரவு நள்ளிரவு இரண்டு மணிக்கு விமானத்தில் கிளம்பி, மறுநாள் கனடா செல்ல இருந்தப்படியாலும், அதற்கு முன்பாக 'தமிழ் மண்' இதழுக்கு தனது தலையங்கத்தை எழுதியாக வேண்டிய பணிச் சுமைகளில் மூழ்கியிருந்த அவர், பழனிபாபா குறித்த விரிவான கட்டுரையயும், நினைவுகளையும் தான் கைப்பட எழுதித் தருவதாக உறுதி அளித்து, தனது நேரச் சிக்கலை விளக்கினார். 
அவரின் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட நான், அவருடன் சில நிமிடங்கள் மேலும் பழனிபாபா அவர்களைப் பற்றி கேட்டுவிட்டு, சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டு எழுந்தேன். எழுந்து நின்று கை குலுக்கிக் கொண்டு நகர்கையில், எழுச்சித் தமிழர் அவர்களாகவே அழைத்து, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோம் எனச் சொல்லி நிறுத்தினார். இன்னும் இரட்டிப்பகவே மகிழ்ந்து போய், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்தும், எழுச்சித் தமிழரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டும் நகர்ந்தோம்.

எழுச்சித் தமிழருடனான இந்த அழகிய சந்திப்பை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான அண்ணன் ஆளூர்.ஷாநவாஸ் (Aloor Shanavas) அவர்கள் ஏற்ப்படுத்திக் கொடுத்தார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கும், இந்த சந்திப்பில் என்னோடு வந்து புகைப்பட, காணொளி எடுத்து உதவிய தோழர்கள் ஏஜாஸ் மற்றும் தமீம் அன்சாரி ஆகியோருக்கு எனது நன்றிகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறேன்.

தோழமையுடன்
பழனி ஷஹான்.

Thursday, 20 November 2014

மதானி உடன் சந்திப்பு - A MEET WITH AN 'ABDUL NASIR MAUDANY'



                                
                                                            புரட்சியாளர் பழனிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் எனதும், தோழர் உமர்கயானினதும் பதினோரு மாத பயணத்தின் ஒரு பகுதியாக, கடந்த 16-10-2014 அன்று பெங்களூரு மல்லிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவரும், ஆளும் பாசிச அதிகார வர்க்கங்களுக்கு சாட்டை அடியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழனாக களம் கண்டுவரும், மனிதநேயப் போராளி அப்துல் நாசர் மதானி (ABDUL NASIR MADANI) அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
(அப்துல் நாசர் மதானி அவர்களோடு)

கோயம்புத்தூரில் 1996-ம் வருடம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனைக் கைதியாக கைது செய்யப்பட்ட மதானி அவர்கள், தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலையாகி வெளி வந்தார். விடுதலையான அவர் மீண்டும் கேரள மண்ணில் தனது ஒடுக்கப்பட்டோருக்கான போராட்ட அரசியலை துணிந்து முன்னெடுத்தார். ஒன்பதரை ஆண்டுகள் சக்கையாய் பிழிந்து எடுத்தாகிவிட்டது, கட்சியின் கட்டமைப்பும் உருக்குலைத்தாகிவிட்டது, இனி எங்கு இவர் போராடப் போகிறார் என்கிற பாசிச சக்திகளின் கண்களில் மிளகாய்ப் பொடிகளைத் தூவிய மதானியை மீண்டும் ஒரு பொய் வழக்கில் விசாரனைக் கைதியாக கது செய்தனர். அது பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்காகும்.

ஏற்க்கனவே அதிகம் உளவுத்துறையினராலும், ஏகாதியபத்தியவான்களாலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த மதானி, கோவை வழக்கிற்குப் பிறகு இன்னும் அதிகமாக, இருவிழி பெருக அதிகார வர்க்கங்களாலும், உளவுத்துறையினராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தார். மேலும் அவரின் வீட்டைச் சுற்றியே காவல் துறையினரும் இருந்து கொண்டுதான் இருந்தனர். அவர் செல்லும் இடங்களில் முழுக்க முழுக்க கண்கானிப்பு வளையங்களுக்குள்தான் வைக்கப்பட்டிருந்தார். இப்படி இருந்தும் மதானி பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என ஒரு கற்பனைக்கும் எட்டாத கதையைச் சொல்லி கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தது அரசு. கிட்டத்தட்ட வெறும் விசாரனைக் கைதியாகவே அவர் இந்த வழக்கிலும் ஆறு ஆண்டுகளைக் கழித்திட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காகப் போராடி பரோல் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் நாங்கள் எங்கள் புத்தகத்திற்க்காக அவரைச் சந்தித்தோம்.

அரை மணி நேரங்கள் அவர் எங்களோடு பேசினார். பழனிபாபாவிற்கும் தனக்குமான உறவுகள், அரசியல் தொடர்புகள், சந்திப்புகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்ட அவருக்கு, பழனிபாபாவோடு அவர் இருக்கும் அரிய புகைப்படத்தினை நாங்கள் காண்பித்து மகிழ்ச்சியை அளித்தோம். பழைய நிகழ்வுகளை அப்படியே சிறிது, சிறிதாக பகிர்ந்து கொண்ட அவர், தான் கோவை சிறையில் இருந்த ஒன்பதரை ஆண்டுகளாத்தில் பழனிபாபா இன்னும் அதிகமாக அறிந்து கொண்டதையும், கூற மறக்கவில்லை. மேலும் இந்த கோவைச் சிறையின் எதிரொலியாக இருந்தது, அவரின் தங்கு தடையின்றிய தமிழ் மொழி உரையாடல்கள். தான் கோவையில் இருந்த காலங்களில்தான் தமிழைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

1992-ல் பாபார் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், மதானி அவர்கள் நடத்தி வந்த ஐ.எஸ்.எஸ் (ISS) இசுலாமிய சேவக் சங் எனும் அமைப்பு அரசால் தடை விதிக்கப்பட்டது. இவர் இந்த அமைப்பு ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் எனும் தீவிரவாத அமைப்பினரால் குண்டு வீசப்பட்டு, தாக்கப்பட்டார். இதனால் அவர் தனது ஒரு காலை இழக்க நேரிட்டது. குண்டு வீசி தனது காலினை தகர்த்தவர்களை போலீசு கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய போது, அப்படியான விசக் கிருமிகளைக் கூட மண்ணித்துவிட்டார் மதானி. இதுதான் மதானியின் மாந்த நேயம்.
(தோழர்.உமர்கயான் அவர்கள், மதானி அவர்களுக்கு, அவருடைய செயற்கை காலினை எடுத்து பொருத்து விடுகிறார்)


தனது இசுலாமிய சேவக் சங் அமைப்பு அரசால் தடை செய்யப்பட்டதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைப் போல தேசத்திற்கு ஊறு விழைவிக்காமல், அதனை அப்படியே விட்டுவிட்டு, தனது இயக்கப் பாதையை, அரசியல் சக்தியாக, கேரளத்தில் தவிர்க்க இயலாத தலைவராக உருவெடுத்தார் மதானி. மக்கள் ஜனநாயக் கட்சி (PDP - PEOPLE DEMOCRATIC PARTY) எனும் கட்சியை உருவாக்கி, இசுலாமியர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் களத்தில் நின்றார், மதானி. அதனால்தான் இன்று அவரின் கைதை கண்டித்து கேரள மாநில மக்கள் மட்டுமல்ல, கேரள அரசே தனது சட்டமன்றத்தில் மதானியை விடுதலை செய்யச் சொல்லி, தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

கேரளத்தின் மாநில முதல்வரான, திரு.உம்மன் சாண்டி அவர்கள், மதானியை சென்று மருத்துவமனையில் நலம் விசாரித்து வருகிறார். கிருத்துவ மதக் குருக்கள் சென்று மதானியை கண்டு வருகின்றனர். கேரள தலித் தலைவர்களும், தலித் மக்களும் அவருக்கு ஆதரவாக கேரளத்தில் பேரணி நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் சென்று மதானியை நேரில் பார்த்துவிட்டு, அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, விரைவில் விடுதலை அடைய வேண்டும் என்று கூறி வந்திருக்கிறார் எனில், அதுதான் போராளி.மதானியின் பண்புக்கு எடுத்துக்காட்டு.

15-10-2014 மாலை பழனியிலிருந்து கிளம்பிய நாங்கள், மெல்ல மெல்ல இடைவெளிகளை விட்டுப் பயணித்து, அதிகாலையில் பெங்களூர் நகரை அடைந்தோம். மதானி அவர்களை சந்திக்க எண்ணிக்க இதற்கு முன்னர், 26-07-2014 அன்று பெங்களூர் சென்று, அவரைச் சந்திக்க இயலாமல், திரும்பினோம். இதற்கு முன்னர், கடந்த  ஒரு வருடமாகவே அவரை சிறையில் சென்று சந்திக்க முயற்சிகளை தோழர்.உமர்கயான் மேற்க்கொண்டு வந்தார், இந்த சமயத்தில் புத்தகத்திற்க்கான சந்திப்பும் தேவைப்பட்டதால், முயற்சிகளைத் தீவிரப் படுத்தினோம். ஒருவழியாக மதானி அவர்களைச் சந்திக்க, அவரின் வழக்கறிஞர்.பாலன் அவர்களின் மூலம் தொடர்பு கிடைத்தது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர்.திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களையும் எங்கள் பயணத்தோடு இணைத்துக் கொண்டோம்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முன்னரே மதானி அவர்களை வைத்து ஒரு ஆவணப்படம் எடுத்திருந்த நிலையால், மதானி அவர்களுக்கு ஆளூர் அவர்கள் முன்னரே அறிமுகமானவராக இருந்தார். இருந்தாலும் இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மதானி குறித்த தொடர்புகள் இல்லாமல் போயிருந்தமையால், எங்களின் முயற்சியில் மூலம் மதானியின் நேரடித் தொடர்பினை எடுத்தோம். மதானி அவர்களைச் சந்திக்க செல்லவிருக்கும் தகவல்களை முன்கூட்டியே ஷாநவாஸ் அவர்களுக்கு தெரிவித்து, அவரையும் வருமாறு அழைத்திருந்தோம், இதன் அடிப்படையில் அவரும், சென்னையில் இருந்து பெங்களூர் வந்துவிட்டார்.

மதானி அவர்களின் வழக்கறிஞர்.தோழர்.பாலன் அவர்களை நாங்கள் 16-ம் தேதி காலையில் தொடர்பு கொண்டு வந்திருக்கும், செய்தியினைத் தெரிவித்தோம், அதனைக் கேட்டுக் கொண்ட அவர், மதானி அவர்களுக்கு தொடர்பு கொண்டு விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். சில மணித்துளிகள் கடந்த நிலையில், பாலன் அவர்கள் தொடர்பு கொண்டு மதானி அவர்களின் தொடர்பு எண்ணை எங்களிடம் தெரிவித்தார், நாங்கள் அந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து மதானி அவர்களிடன் நேரடியாகப் பேசினோம். சந்திப்புக்கான நேரம் சரிவர சொல்ல இயலாலதால், அவர் மீண்டும் பதினைந்து நிமிடம் கழித்டு அழைக்க வேண்டிக் கொண்டார். இதனையடுத்து மீண்டும் அழைத்துப் பேசிய போது, அவர் காலை 11-மணிக்கு சந்திப்பிற்கு ஒப்புக் கொண்டார்.
காலை உணவு வேளைகளை முடித்துவிட்ட நாங்கள், தங்கியிருந்த பகுதியிலிருந்து, மதானி அவர்கள் இருந்த மல்லிகை மருத்துவமனைக்கு மகிழுந்தில் பயணமானோம். இதே தருணத்தில் ஷாநவாஸ் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தோம், அவரும் புறப்பட்டு குறிப்பிட்டு மருத்துவமனைக்கு வந்துவிடுவதாக தெரிவித்தார். நாஙகள் மருத்துவமனைக்கு முன்பாகச் சென்று காத்திருந்தோம், ஆனால் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள் மதானி அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்துவிட்டது, வேறுவழியின்றி நாங்கள் மட்டும் அவரைச் சந்திக்க தயாரானோம். மருத்துவமனையின் வெளியே வந்து, எங்களை அடையாளம் கண்ட மதானி அவர்களின் மகன், எங்களை உள்ளே அழைத்துப் போய்விட்டார்.

அதன் பின்னர், நாங்கள் மதானி அவர்களோடு உரையாடத் தொடங்கினோம். முதலில் அவரின் உடல்நிலைகளைப் பற்றி முழுமையாக விசாரித்துக் கொண்ட நாங்கள், பிறகு அவரின் வழக்குகள் குறித்து விசாரித்தோம். அரசின் இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும் கூட ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலு எங்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

அரசின் பொய் வழக்குகளால், வேண்டுமென்றே திட்டமிட்டு கவிழ்க்கப்படும் சூழ்ச்சிகளால் தனது இளமை முழுமையையும் இழந்து, உடல் முழுக்க நலிவைக் கண்டும் கூட அவரின் போராட்டக் குணம் மாறிடவே இல்லை. இதுபோன்ற மன உறுதி வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது. இந்த நாட்டில், இன்னொருவனின் உரிமையைப் பறித்து, சுத்ந்திரத்தைப் பறித்து அதன் மூலம் ஒரு போலி தேசத்தை உருவாக்கியவரெல்லாம் இரும்பு மனிதர் என்கின்றனர். ஆனால் எங்களைப் பொறுத்துவரை மதானிதான் அதற்கு சரியான ஆளாக இருக்க முடியும். அதேபோல் தமிழகத்தில் பழனிபாபாவைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு அரை மணிநேரம் நீண்ட எங்கள் உரையாடலில் பல விடயங்களைப் பேசினோம், மையமாக எங்களின் புத்தகத்திற்க்கான உரையாடல் இருந்தது. கேரள அரசியல் பற்றி பேசிய அவர், தமிழக அரசியல் பற்றிம் பேசினார். "ஏன் தமிழகத்தில் தலித் தலைவர்கள், இப்படி பிரிந்து நிற்க்கிறார்கள்" என்று வருத்தத்தோடு தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை அதிகமாக விசாரித்துக் கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் அவரின் தோல்வி குறித்தும் வருத்தங்களை வெளிப்படுத்தினார். (எங்களின் சந்திப்பிற்குப் பிறகுதான் திருமாவளவன் அவர்கள், மதானியைச் சந்தித்தார்). இறுதியாக நாங்கள் விடைபெறும் போது, புரட்சியாளர்.பழனிபாபாவின் 'வாழ்வும்-போராட்டமும்' புத்தகத்திற்க்கான மதானி அவர்களின் வாழ்த்துரையினைக் கேட்டோம், அதற்கு அவர் மறுப்புகளற்று, நிச்சயமாக எங்கிருந்தபோதும் (சிறையிலிருந்தாலும் கூட) நான் வாழ்த்துரை அளிப்பேன் என உறுதிபடத் தெரிவித்தார்.

மதானி அவர்களின் பொன்னான சந்திப்பினை, உயர்வான கலந்துரையாடல்களை முடித்துவிட்டு வெளிவந்து தேநீர் அருந்தச் சென்றோம். அப்போதும் ஷாநவாஸ் அவர்கள் வந்து சேரவில்லை. அலைபேசியில் பலமுறை முயற்ச்சித்தும் அவர் இணைப்பில் கிடைக்கவில்லை. ஒரு அரை மணி நேரம் கழிந்த நிலையில் அவரின் அழைப்பு வந்தது, அதில் அவர் அருகே வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். சரி, என நாங்கள் இன்னும் காத்து நின்றோம், இறுதியாக மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு நாங்கள் வெளியேறிய ஒரு மணி நேரங்கள் கழித்து அவர் அங்கு வந்தார்.

இருசக்கர வாகனத்தில் வந்ததாலும், முகவரி சரியாக புலப்படாததினாலும், வாகன இடைஞ்சல்களாலும் இவ்வளவும் தாமதம் ஆகிவிட்டதினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் நாங்கள் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு, மதானி மாலை வேளையில் தங்களைச் சந்திப்பதாகச் சொன்னார் எனத் தெரிவித்தோம். எங்களிடமிருந்து அவர் மதானி அவர்களின் அலைபேசி எண்ணைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களோடு சென்று மதானி அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற எங்களின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தச் சந்திப்பிற்க்காகவே சென்னையில் இருந்து எங்களின் அழைப்பின் பேரில் வந்திருந்த அவருக்கு, தவிர்க்க இயலாத காரணங்களால், நேரத்திற்கு வந்து சேர இயலாமல் போனது வருத்தமாய்த்தான் இருந்தது. அதற்க்காகவே, அவர் வருகைக்காக காத்திருந்து அவரிடம் தெரிவித்துவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

இதன் பின்னர், மாலை 4-மணியளவில் மதானியைச் சந்திக்க தனது குடும்பத்தோடு சென்ற ஆளூர் ஷாநவாஸ் அவர்கள், மதானி அவர்களோடு பேசிவிட்டு வெளியே வந்ததும், எங்களுக்கு தொடர்பு கொண்டு மகிழ்வாய் பேசினார். ஏற்க்கனவே ;கைதியின் கதை' என்கிற மதானி குறித்தான ஆவணப்படத்டை எடுத்தவர் என்கிற ரீதியிலும், 'அப்துல் நாசர் மதானி -அதிகாரத்தின் இரை' என்கிற தலைப்பில் சமநிலைச் சமூதாயத்தில் கட்டுரை எழுதியிருந்தமையாலும், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளருமாக உள்ள நிலையால் மதானி அவர்களும் ஷாநவாஸ் அவர்கள் நன்கு பழக்கப்படுப் போன ஒருவர்தான். நானும், ஷாநவாஸ் அவர்களும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தினை ய்தேர்ச்சையாக மதானி அவர்கள், சட்டென இது ஷாநவாஸ்தானே என கேட்டார். இதேபோல தோழர்.உமர்கயான் அவர்கள், பவானி.பா.மோகன் அவர்களின் வழக்கறிஞர் குழுமத்திலுள்ள வழக்கறிஞர் என்பதால், அவரும் மதானிக்கு அறிமுகமானவராகத்தான் இருந்தார். எளியவன் நானே மதானி அவர்களுக்கு சற்றும் அறிமுகமில்லாதவனாக இருந்திருந்தேன்.
             (ஆளூர் ஷாநவாஸ் மற்றும் சமநிலைச் சமுதாயம்                                                பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாபர் பாக்கவி அவர்களுடன் நான்)

மதானி அவர்களைச் சந்தித்துவிட்டு, வெளியே வந்ததும் அண்ணன்.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எனக்கு அழைத்துப் பேசிய போது, மதானி அவர்கள் என்னைக் குறித்து விசாரித்ததினையும், பாராட்டியதையும் தெரிவித்தார். மேலும் சிறுவயதில் ஆளூர் அவர்களைப் பார்த்ததைப் போலவே நான் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்குள் நீங்காத மகிழ்வை இன்னும் தந்து கொண்டேதான் உள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, மதானி அவர்களின் உரையாடல்களை நாங்கள் முழுமையாக காணொளியாகப் பதிவு செய்தோம். இதேபோக ஆளூர் அவர்களும் மதானி அவர்களுடனான பேட்டியினை முழுமையாக ஆவணப்படுத்திவிட்டு வந்தார். நாங்கள் ஊர் திரும்பிய மறுநாள், நான் ஆளூர் அவர்களுக்கு அழைத்துக் கேட்க்கையில் அவர் இன்னும் பெங்களூரில்தான் இருப்பதாகச் சொன்னார். மேலதிகமாக, ஜீனியர் விகடனிலிருந்து (பத்திரிக்கை) வருவதாக, அவரிடம் அழைத்துப் பேசியுள்ளனர். அவர் அங்கு சென்றிருப்பதினை அறிந்து கொண்ட ஜீனியர் விகடன் நிருபர், உடனே அவரைத் தொடர்பு கொண்டு, மதானியை சந்திக்க வேண்டிய்ள்ளார். அதுசமயம் ஆளூர் அவர்களும் அவர்களுக்காக ஒருநாள் சேர்த்து இருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். மதானி அவர்கள் சிறைவாசி என்பதால் அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க இயலாது. இதனால் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எடுத்திருந்து தனிப்பட்ட பேட்டியினை அப்படியே தொகுத்து கேட்டுள்ளது ஜீனியர் விகடன். 09-11-2014 அன்று பிரசுரமாகிய ஜீனியர் விகடனில், மதானி பற்றிய ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேட்ட்டி வெளியாகியிருந்தது. இதன் தாக்கமே தற்போது மதானி அவர்களின் வழக்கை 4-மாதங்களுக்குள் விரைந்து முடிக்கவும், வழக்கு முடியும் வரை அவர் மருத்துவமனையிலேயே இருக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட வழி வகுத்துள்ளது என்கிற இன்னும் கூடுதல் மகிழ்ச்சிதான்.

விரைவில் புரட்சியாளர் பழனிபாபா, அவர்களின் வரலாற்று நூல், புரட்சியாளர்.மதானி அவர்களின் வாழ்த்துரையோடு வெளிவரும்.

தோழமையுடன்
பழனி ஷஹான்




Monday, 21 July 2014

மகிழ்ச்சித் தருணத்தில் சில பின்னோக்கிய நினைவுகள்


                                             
                        எழுத்து, இலக்கியம், குறும்படம் அல்லது ஆவணப்பட என்கிற எனது இந்த குறுகிய கால, கட்டெறும்ப்பு அளவிலான பயணத்தின் மிகச் சரியான தொடக்கம், 'ஆளூர் ஷாநவாஸ்'.
              (இணைந்து எடுத்துக் கொண்ட முதல் ஒளிப்படம் -12-07-2014)

நான் எனது பத்தாம் வகுப்பில் இருந்து பொது விடயங்களில், போராட்டங்களில் கலந்து கொண்டு வருபவன். ஆரம்பத்தில் "சேகுவேரா-வினால்" கவரப்பட்ட நான் 'இந்திய மாணவர் சங்கத்தில்' (SFI) இணைந்து கொண்டேன். பிறகு அப்படியே இந்திய வாலிபர் சனநாயக இயக்கத்தில் (DYFI) இணைந்து செயல்பட்டு, திண்டுக்கம் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் களமாடினேன். நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரண்டாம் வகுப்பு செல்ல இருக்கும் இடைவெளியான கோடை விடுமுறை நாட்களில் நிகழ்ந்த என் ஊட்டி பயணம், வாழ்வில் ஒரு பெரும் இழப்பைக் கொடுத்து, என்னை பல மாதங்கள் முடக்கி படுக்க வைத்துவிட்டது அதன் பிறகான நாட்களில் நான் இந்த வாழ்க்கையெல்லாம் விட்டு ஒரு மாறுதலுக்குச் சென்றுவிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல், கணிதம் எடுத்து பயின்ற நான், ஒருவருடங்கள் கழித்து வரலாறு, வணிகம், பொருளியல் பாடங்களை எழுதி பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்தக் கட்டங்களில் நானே சுயமாக 'கணினி உலவு மையம் வைத்ததும், ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்ததும் மறக்கவியலா என்னின் துணிச்சல்கள் என்றே சொல்லலாம். பள்ளிப்படிப்பை முடித்த நான் அடுத்து என்ன செய்வது என்று திணறவில்லை. எனது இலக்கு கிரிக்கெட்டில் முன்னேறுவது என்கிறதாகத்தான் இருந்தது. பழைய இழப்பான நினைவுகளில் இருந்து முன்னேறிய எனக்கு இந்த விளையாட்டுதான் துணையாக, நினைவாக இருந்ததினால், நான் இதை இன்னும் கூர்தீட்டி, 19-வயதிற்க்குட்பட்ட பிரிவில், மதுரை மண்டல அணியில் 'விக்கேட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவு' சில விளையாட்டுக்களில் அணித் துணை தலைவராகவும் கூட இருந்துவந்துள்ளேன். என்னுடைய இந்த ஆர்வங்களினால் திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் அணிச் செயலாளர் அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து, பி.பி.இ.எஸ் (B.P.E.S) எனும் விளையாட்டுத்துறை சார்ந்த படிப்பை படிக்க வழிகாட்டி,  சீட்டும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் போதிய பணம் இல்லாததாலும், குடும்ப ஒத்துழைப்பும் இல்லாததாலும் என்னால் அதில் செல்ல இயலவில்லை. இருந்தும் கல்வியைத் தொடர வேண்டுமே என்கிற முனைப்பும், நினைப்பும் என்னில் அகலவே இல்லை. இந்தத் தருணத்தில் எனது எதிர்காலத் துணையாரின் கலந்துரையாடலிற்குப் பிறகு, குடும்ப அனுமதித்த திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில், பி.ஏ ஆங்கில இலக்கிய படிக்க ஆரம்பித்தேன். இங்கு வந்த பின்னர் ஒரு இரு மாதங்கள் நான் திருச்சி மாவட்ட அணியில் விளையாடினேன். ஆனால் தொடர்ந்து என்னால் விளையாட இயலவில்லை. நான்  இந்தத் தருணங்களில்தான் நான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (POPULAR FRONT OF INDIA) எனும் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். மூன்று ஆண்டுகள் இவ்வமைப்பில் பயணித்த நான், அதன் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் (CAMPUS FRONT OF INDIA) திண்டுக்கல் மாவட்டத்தில் மிகத் தீவிரமாக ஒருவருடம் களமாடியுள்ளேன்.

(அமைப்பில் செயல்பட்ட காலங்களில் சில புகைப்படங்கள்):





பின்னர் சில முரண்பாடுகளினூடே தொடர்ந்த பயணங்கள், நான் இதிலிருந்து முற்றாக நீங்கிக் கொண்டேன். மாணவ அமைப்பில் முரணோடு விலகல் இல்லாமல் இருந்த கடத்தில்தான் எனக்கு எஸ்.டி.பி.ஐ (S.D.P.I) கட்சியின் ஒட்டன்சத்திய ஒன்றிய செயலாளர் பொறுப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் இந்தச் சமயங்களில் அதிகம் முரண்பட்டு வெளியேறவே அதிகம் விரும்பியிருந்தேன். இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பில் இருந்து முற்றாக கடிதம் கொடுத்துவிட்டு விலகிய தருணத்தில்தான், என இலக்கின் அறிமுகமாய், கிடைத்தார் ஆளூர் ஷாநவாஸ்.

முகநூலில் அதிகம் கவனித்துக் கொண்டு, அவரால் ஈர்க்கப்பட்ட நான், அவரின் பெயரை கூகுள் உலவியில் அடித்து உலவினேன். அதில் அவரின் வலைப்பூ தளம் எனக்கு அறிமுகமானது. அதில் சென்று, "கடந்து வந்த நாட்களில், நடந்து வந்த பாதைகள்" எனும் அவரின் அணுபவக் கட்டுரையை (http://aloorshanavas.blogspot.in/2010/12/blog-post_31.html) வாசித்த நான் இன்னும் அதிகமாகவே ஈர்ப்பில் சென்றுவிட்டேன் (. இதன் பிறகுகளில்தான் அவரின் கட்டுரைகளை சமநிலைச் சமுதாயம் இதழிலும், கீற்று இணைய தளத்திலும் படிக்க ஆரம்பித்து தொடர்ந்தேன். ஆவணப்படம் என்ற சொல்லாடல்களெல்லாம் எனக்கு இவரிடமிருந்து அறிமுகமானவைகள்தான்.

இதன் பின்னர் மிகச் சரியாக, 10-10-2012 அன்று முகநூல் வாயிலாக அவரைத் தொடர்பு கொண்ட நான், 12-12-2012 அன்று அவரிடம் முதன் முதலில் அலைபேசியில் பேசி மகிழ்ந்தேன். இவரின் எழுத்துக்கள்தான் எனக்கான எழுத்துப் பயணத்தின் ஊக்கங்கல். பள்ளிக் காலங்களில், தினத்தந்தி செய்தி ஏட்டின் மாணவர் ஸ்பெசல் பகுதிக்கு ஏதேனும் துணுக்குகள், கவிதைகள், செய்திகள் என எழுதிப் போடுவேன் அவைகள் சில வெளியாகியும் உள்ளன. அப்பொழுது என்னை ஊக்கபடுத்திக் கொடுத்த  'பாலு' எனும் பள்ளி அசிரியர், இப்போது இந்து முன்னனில் சென்று எனக்கு முற்றும் எதிராக, உள்ளூர் ஜமாத், குடும்பம் என தொல்லைகளை திரை மறைவில் செய்பவராக மாறிப் போய்விட்டார். நான் துணிந்து கணினி உலவி மையம் வைக்க என்ன பாராட்டி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ரூ.5000 கொடுத்து, அந்த மையத்தினை விலைபேசி முடித்துக் கொடுத்ததில் இவரே பெரிதும் உதவி செய்துள்ளார், என்பது காலத்தால் மறக்க இயலாத நன்றிக் கடன். இவர்தான் எனது முதல் செய்தி ஒன்று தினந்ததியில் வந்தபோது எடுத்துக் காட்டியவர். பின்னர் நான் உள்ளூர் பிரச்சனைகளை எழுதிப் போடுவது, கவிதைகளைக் கிறுக்குவது என்று இருந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் சில காலங்களிலேயே மறைந்து போய்விட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, ஈழ மக்களுக்காக நான் கடுமையாக ஒரு கட்டுரையை எழுதி, தனித் தமிழ்நாடு என்ற வடிவில் அதனை அமைத்து தினந்தந்திக்கு அனுப்பினேன். (அப்போது என்ன தெரியும், ஏதோ எனது ஆசிரியர் ஒருவரினால் ஏதோ என கொஞசம் அறிந்த விடயங்களை வைத்து துள்ளினேன், அவ்வளவுதான் ஆனால் பெரிய பார்வையெல்லாம் அதில் இருக்கவில்லை.) இத்தோடு எழுதுவது என்பது மாறிப்போகிவிட்டது.

மீண்டும் எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், நான் 21-12-2014 அன்று 'ஊடகப் போர் வாள்' எனும் கட்டுரையை எழுதினேன். ஆனால் இது எவ்வித கவனத்தையும் பெறவே இல்லை.  ஆளூர் அவர்களின் அரசியல் எழுத்துக்களால் பின்தொடரப்பட்ட நான், இதே டிசம்பரில்தான் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதில் இக்கட்டுரையை பதிவிட்டுக் கொண்டேன். இதற்கு முன்பு நான் அறிந்திருந்ததெல்லாம் யாகூ மெசேஞ்சர், முகநூல், ட்விட்டர், ஆர்குட் இப்படியானவைகள்தான்.

ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மேல் ஈர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான இன்னொன்று அவரின், 'விதையாய் விழுந்தவர் -பழனிபாபா' என்கிற ஒரு கட்டுரையும், பழனிபாபாவின் நினைவு நாள் ஒன்றில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்வேன். சேகுவேராவிற்குப் பிறகு நான் அதிகம் ஈர்க்கப்பட்டது புரட்சியாளர்.பழனிபாபா அவர்களால்தான். கல்லூரியின் முதலாமாண்டில்தான் எனக்கு பழனிபாபா என்கிற சொல் அறிமுகமானது. நானும் ஏதோ இந்து சாமியார் என்றுதான் நினைத்தேன். பின்னர் இசுலாம் குறித்து பேசிய பொதக்குடி உரையைக் கேட்ட நான், சிலரின் தகவல்களால் அவர் இந்துவாக இருந்து மாறியவர் என்று அறிந்து வைத்துக் கொண்டேன். இன்னும் சில மாதங்கள் கழிந்தப் பிறகுதான் அவர் ஒரு இசுலாமியர் என்றும், பழனி என்பது ஊரின் பெயரைக் குறிப்பது என்றும் அறிந்தேன். இன்னும் ஒன்று நானும் இதே ஊர் என்பதனால், இன்னும் அதிகம் பூரிப்படைந்து போனேன். அதிலிருந்து பாபா அவர்களின் உரைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அதிகம் கேட்பேன், பிறகு கேசட்டுகளை வாங்கிக் கேட்க ஆரம்பத்தேன். இதன் நீட்சியாக ஆளூர் அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரை எனக்கு இன்னும் ஈர்ப்பை அதிகமாக்கியது. இந்தத் தேடலின் நீட்சிதான் தோழர்.உமர்கயான் அவர்களோடு இணைந்து என்னை புரட்சியாளர்.பழனிபாபா-வின் காலடித் தடங்களை தேடி பயணிக்க வைத்துள்ளது.

சில கட்டுரைகள் வாயிலாக ஆளூரை அறிந்த நான் அவரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக, எனக்கு அறிமுகமான சிலரிடம் அவரைக் குறித்து கேட்டேன். வந்த பதில்கள், 'ஆமாம் இருக்காப்புல, வாய்க்கொழுப்பு அதிகமானவர்", என்றும், அந்தப் பையன் தலைக்கணம்ப்பா, சும்மா இந்த மார்க்சுக்கு பின்பாட்டு பாடிக்கிட்டுத் திரிவாப்புல (இதனைச் சொல்லியவர்கள் இசுலாமியர்கள்தான்) என்கிற விதங்களில்தான் கேள்வியுற்றேன். இதனைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே அவரோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இந்த முட்டாள் தனமாக என்னிடத்தில் அவரைப் பற்றி சிலர் எனக்குத் தெரிவித்ததை, நான் அவரிடமே ஒருமுறை அலைபேசியில் கூறியுள்ளேன். இது நான் திருச்சிக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த ஒரு நாளில், இரவு நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேசிய தருணத்தில் பகிர்ந்து கொண்டது. அவரும், அவரின் காயிதே மில்லத் ஆவணப்பட முயற்சிகளுக்கு, இசுலாமியச் சமூகத்தில் உள்ள தலைவர் ஒருவர் செய்த இடையூறல்களையும் சொல்லிக் காட்டி பகிர்ந்தார். இதன்பிறகு நான் திருச்சி சென்றது தோழர் உமர்கயான் அவர்களோடுதான். தஞ்சையில் மே-17ன் ஆவணப்பட நிகழ்விற்க்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்க்குச் சென்றபோது, திருச்சியில் இறங்கி சில மணித்துளிகள் செலவிட்டேன்.
(போராளித் தோழர்.உமர்கயான் அவர்களுடனான முதல் புகைப்படம்)


திருச்சியில் ஆளூர் அவர்களிடம் அலைபேசியில் பேசிய அந்நாட்களுக்கு முன்னரான சில மாதங்களில்தான் நான் 'நிழல்' குறும்பட பயிற்சி பட்டறையில் குறும்பட, ஆவணப்பட விடயங்களுக்கான பயிற்சிகளைப் பெற்றேன். இங்கு செல்வதற்கு முன்னர் கூட, நிழல் நிறுவனம் குறித்தும், செல்லலாம எனவும் நான் வினவியது ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம்தான். பிறகு பயிற்சி பட்டறைக்கு சென்று தங்கியிருந்த நாட்களிதான் தெரிந்து கொண்டேன், நிழல்.ப.திருநவுக்கரசு ஐயா அவர்களும், ஆளூர் அவர்களும் தோழர்களென. திருநாவுக்கரசு அவர்களை நான் யூடியூப்பில் சில காணொளிகளில் கண்டு மிகவும் வயது முதிர்ந்தவர் என்றே எண்ணியிருந்தேன் பிறகு நேரில் பார்க்கையில்தான் தெரிந்து கொண்டேன் உண்மை அப்படியில்லையென. மேலும் இவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் திட்டம் வைத்துக் கொண்டுதான் பட்டறைக்குப் போனேன். ஆனால் பயிற்சி நாட்களில் உணர்ந்து கொண்டேன் அது தேவையில்லையென. ஏனெனில் அவரின் நெருக்கமான, சகஜமான பழக்கங்களால் எனக்கு அது தோன்றாமலே போய்விட்டது. 
(நிழல்.ப.திருநாவுக்கரசு அவர்கள்டன், திருப்பூரில்)

இதே பயிற்சியின் இறுதி நாளில்தான் ஐயா.பதியம் பாரதி வாசன் அவர்களைச் சந்தித்தேன். அதற்கு முன்பிருந்து அவர் முகநூலின் நட்பு வட்டத்தில் இருந்த மட்டில்தான் எனக்குத் தெரியும். இந்த பயிற்சி நாட்கள் குறித்த எனது விரிவான அனுபவங்களை, நிழல் இதழுக்கு எழுதியிருந்தேன். அது பிரசுரம் ஆகியும் இருந்தது. எனது இந்த வலைப்பூவிலும் அதனை பதிவிட்டுள்ளேன்.

(பயிற்சி நாட்களில், கோவை செட்டிபாளையம், சி.டி ஃபவுன்டேசனில்)



பழனிபாபாவின் வீரிய பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட நான், 2013, சனவரி 28 அன்று ஆயக்குடியில் நடந்த அவரின் நினைவுநாள் அரசியல் எழுச்சிக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்குதான் ஆதித் தமிழர் பேரவையின் தோழர்.நீலவேந்தன் அவர்களை நேரில் முதலில் பார்த்தேன். அதன்பிறகு திருப்பூரில் ஒரு நிகழ்வில் பார்த்ததுதான் இறுதி. அடுத்த சில மாதங்களிலேயே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இதே கூட்டத்தில் மதிப்புத் தோழர்.பாமரன் அவர்களும், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்களும் பேசினார்கள். இதற்கு அடுத்த நாள், விஸ்ரூபம் திரைப்படம் குறித்த புதிய தலைமுறையின் நேர்பட பேசு விவாத அரங்கில் பங்கெடுத்த சீனு ராமசாமி, முதல்நாள் ஆயக்குடியில் பேசிய பேச்சுக்களுக்கு முற்றும் மாற்றாக பேசினார். இதனைக் கண்டுவிடுத்தான் அவரைக் குறித்த ஒருவிமர்சனக் கட்டுரை நான் கீற்றில் எழுதினேன்.(http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/22854-2013-02-04-06-59-47) 
இந்த வகையில் என்னுடைய முதல் அரசியல் புரிதல்களுடன் கூடிய கட்டுரையை கீற்று நந்தன் வெளியிட்டு வழி கொடுத்தார்.  இதன்பிறகு அப்படியே கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டேன்.

(பதியம்.பாரதிவாசன் அவர்களுடனான முதல் புகைப்படம்)
வெறுமனே அரசியல் கட்டுரைகள் என்கிற மட்டில் சென்று கொண்டிருந்த எஎனக்கு, இலக்கியங்களை நோக்கி நகர்த்தியது, ஐயா.பாரதிவாசன் அவர்களால்தான்.
தருமபுரில் சாதிய வன்கொடுமைக்கு இரையான தோழர்.இளவரசனின் மரணம் குறித்த ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வுதான் எனக்கான இலக்கிய மற்றும் திருப்பூர் தொடக்கம்.
(கவிதை வாசிப்பின் போது)
(தோழர்.நீலவேந்தன் அவர்களுடனான முதலும், இறுதியுமான படம்)

இதன் பின்னாளான நாட்களில்தான் தொடர்ந்து திருப்பூர் சென்று வர ஆரம்பித்தேன். பதியத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு அப்படியே தொடர்ந்தேன். இதனடுத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து சிறுகதைகள்.காம் இணையதளத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். என் வாழ்வில் வந்துவிழுந்த பேரிடர் இழப்பினை மையப்படுத்தி எழுதிய என சிறுகதைத் தளம்; (http://www.sirukathaigal.com/குடும்பம்/ஓர்-எழுத்தாளனின் மறுபிறவி)

சில மாதங்களில் தாராபுரம் நகரில், சோனி சைபர் சாட், புகைப்பட கருவியை வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் சென்னை நோக்கிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்கியிருந்த நான், அந்தக் கருவி அவ்வளவு அவசரமாக வாங்கப்பட்டதற்க்கான, நபரைச் சந்திக்க 30-10-2013 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று, மூன்று மணி நேரங்கள் உரையாடிவிட்டு வந்தேனே தவிர அந்தக் கருவி வாங்கப்பட்டதற்க்கான பயன்பாட்டை நான் செலுத்தவில்லை. அதற்க்கான வாய்ப்பு அன்று அமையவே இல்லை.  இதனடுத்து, உள்ளூர் பள்ளிவாசல் ஜமாத் பிரச்சனை, அதனடுத்து எனது இளநிலை படிப்பை மூன்றாவதாக தொடர்ந்த கல்லூரியிலும் பிரச்சனை என, சலிப்புகளோடும், இந்து முன்னனி நபரின் எதிர்ப்புகளோடும், மனக்குமுறல்களோடும் கடந்தது சில மாதம். இப்பிரச்சனைக்காக பலரிடம் சென்று மனு கொடுத்து அதற்க்கென போராடிக் கொண்டிருந்தேன். இன்றும் அது தீர்ந்தபாடில்லை. இதற்க்குள் தொலைநிலைக் கல்வியில் இரண்டு இளநிலையை முடித்துவிட்டேன்.

பிறகு மீண்டும் சனவரி-8-2014 அன்று அவரின் இரண்டாவது புத்தக நிகழ்விற்குச் சென்றேன், அப்பொழுதும் அது சாத்தியப்படவே இல்லை. ஆனால் அன்றைய தினத்தில்தான், தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர், கே.எம்.சரீப் அவர்களையும், முஸ்லீம் லீக்கின் மாநில பொறுப்பாளர்.வழக்கறிஞர்.ஜீவகிரிதரன் அவர்களையும், தேசிய லீக்கின் மாநிலத் தலைவர், தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்களையும், சமூக ஆர்வலரும், ஆவணப்பட இயக்குநருமான, செங்கிஸ்கான் அவர்களையும் சந்தித்துப் பேசினேன். இதுதான புரட்சியளர்.பழனிபாபா அவர்களின் 'வாழ்வும் போராட்டமும்' எனும் வரலாற்று நூலுக்கான முதல் சந்திப்புகளும் கூட.
இதன் பிறகு இந்தப் புத்தகத்திற்க்காக பல்வேறு சந்திப்புகள், பல்வேறு ஆளுமைகளுடனான தொடர்புகளென, எனக்கான வட்டம் விரிவடைந்து கொண்டது.

இதன் பிறகான காலங்களில், ஆளூர் அவர்களுடனான மெல்லிய இடைவெளிப் போக்கு அதிகரித்தது. அவருடனான பேச்சுக்கள் முற்றும் குறந்து போயின. காரணம் நான் அவரை தவறாக எடை போட்டதின் மடமைகள் அவை. அவரின் எழுத்துக்களை அரசியலுக்கான இலாபியாக, அவரின் சுயத்திற்க்கான இலாபியாக எண்ணிக் கொண்டேன். சனவரி-28-2014 பழனிபாபா நினைவு நாள் கூட்டம் முடித்துவிட்டு, ஒரு கட்சியின் மாநிலப் பொறுப்பில் உள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவரும் என் மனதில் அரும்பிய கருத்தினை வளர்த்துவிடும்படி, எழுத்துக்களை தனக்காக, கட்சிக்காகப் பயன்ப்டுத்திக் கொள்கிறாரென கூறினார். அதிலிருந்து சில மாதங்கள் தொடர்புகள் அற்றெ இருந்துவிட்டேன். 
ஆனால், சமீபத்தில் சென்னை சென்ட்ரலில் குண்டு வெடித்ததை ஒட்டி, முன்னர் கைது செய்யப்பட்ட ஜாஹிர் உசேன்தான் காரணம் என்பதைப் போல, கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அப்பட்டமான சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து, மிகச் சரியாக ஆளூர் அவர்கள் தனது முகநூலில் கருத்து வெளியிட்டார். அது மிகவும் சர்ச்சைக்கும், திமுக நபர்கள் பலரையும் அவரை நோக்கி எதிர்ப்பாகத் திருப்பியது.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அவருக்கு நான் அழைத்துப் பேசினேன். அருமையான பதிலடி என்று அவருடன் பகிர்ந்தேன்.

அப்பொழுது நான் கேட்டேன், இதனால் உங்களின் எதிர்கால அரசியல் பாதிக்காதா என்றேன். அதற்கு அவர் சொல்லியது:
"என்னைக் கொண்டுவந்தது சமுயதாயக் களங்கள்தான். பதவி என்பது என்னுடைய தகுதிக்கு கிடைத்ததே தவிர, அது எனக்கான கடிவாளமில்லை. சமூகத்தை நோக்கி இப்படி வருகிறபோது, அதனை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பதவி எதிர்காலம்னு சுருங்கக் கூடாது"
என்ற வண்ணம் தெரிவித்தார்.

சமீபத்திலேதான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி பெற்றவர். விடுதலைச் சிறுத்தையானது திமுக-வின் கூட்டனிக் கட்சி, இப்படி இருக்க இவர் எப்படி கலைஞரை எதிர்த்து பேசினார் என்கிற சிந்தனையும்,
இவருக்கு அதிகம், ஆரம்பத்திலே காட்சி ஊடக முகம் கொடுத்தது புதிய தலைமுறை அது பாஜக பக்கம் சாய்ந்தது, இதேபோல் கேப்டனும் சாய்ந்து கொண்டது. ஆதாலால் அவர்கள் இவரை அழைப்பது இயலாலதது. என்றேனும் வேண்டுமானால் நடக்கலாம். இந்த நிலையில் இவர் ராஜ் நியூஸ், இமயம் டிவி போன்ற சேனல்களில் வந்தாலும், கலைஞர் செய்திகள்தான் தற்போது இவரை அழைத்துக் கொண்டிருக்கும் பெரிய ஊடகம், இந்த நிலையில் கலைஞரை விமர்சனம் செய்துள்ளாரே, இனி கலைஞர் செய்திகள் எப்படி கூப்படிப் போகிறார்களென்கிற சிந்தனையும் எனக்கு அழுத்தமாகவே இருந்தது. அவரை நினைத்திருப்பாரோ என்னவோ, நான் இப்படித்தான் நினைத்தேன்' \கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம், ஒரு பொதுச் சமூக கட்சியில் மாநில பொறுப்பில் சென்றுள்ள இவர் ஏன் இப்படி செய்ய வேண்டும், இவரின் இடம் இன்று மிக முக்கியத் தேவை, கொஞசம் கவனமாகக் கையாண்டிருக்கலாம் அல்லவா?| என்றுதான்.
ஆனால் இதுபற்றியெல்லான் அலட்டிக் கொண்டவராக அவர் தெரியவில்லை, 'பதவி கடிவாளமில்லை' எனச் சொல்லிய ஒற்றைச் சொல்லில் அவரின் மீதான அத்துனை தப்பபிப்ராயங்களும் உடைந்து போய்விட்டன. 

சரி விடயத்திற்கு வருகிறேன்....
இருமுறை வாய்ப்பு இருந்தும், அந்தக் கருவி வாங்கியதற்க்கான முதல் எண்ணம் நிறைவேறவே இல்லை. இது சரியாக நிறைவேறியது 12-07-2014 சனிக் கிழமை அன்றுதான். அன்று அவரைச் சந்திக்க அவரது எக்மோரில் உள்ள விட்டிற்கு உற்ற தொஒழர்.ஷாஜஹான் அவர்களோடு சென்றேன். அப்பொழுது எடுக்கப்பட ஒளிப்படம்தான், ஆளுர் அண்ணனோடு எடுத்துக் கொண்ட முதல் படம். இதைத்தான், தொடக்கத்தில் பதிவிட்டேன்.


(தோழர்.உமர்கயான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)

(தோழர்.ஷாஜஹான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)

பிறகு மீண்டும், 13-07-2014 அன்று மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம், அப்போது தோழர்.ஷாஜஹான் மற்றும், போராளித் தோழர்.உமர்கயான் அவர்களும் உடனிருந்தனர். இந்த சந்திப்புதான் மகிழ்ச்சித் தருணமென நான் தலைப்பாய்க் குறித்திருப்பதற்க்கான நிகழ்வாகும். எந்த ஆளுமையிடம், எப்படி இருக்க வேண்டுமென நினைத்தேனோ அது அநேகம் நிறைவேறிய நாள் அது. பழனிபாபா அவர்கள் குறித்த நிறைய ஆவணங்களை சேகரித்து வைத்திருந்த ஆளூர் அண்ணன், அதனை அப்படியே எங்களுக்குத் தந்து உதவினார். இது அவரின் பத்தாண்டுகால சேகரிப்புகள் என்றும் குறிப்பிட்டார். நாங்கள் இதுவரை எட்டு மாதங்கள், பழனிபாபாவின் காலடித்தடத்தைத் தேடி நெடிய பயணங்களையும், அதிக சந்திப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறோம், யாரும் இவ்வளவு எளிதில், அதுவும் இவ்வளவு ஆவணங்களை கொடுத்ததே இல்லை. அவர்களிடம் இருந்தாலும் கூட அலைக்கழிப்புச் செய்தனரே தவிர உடனே தந்திடவில்லை. பலர் இருந்தும் தரவில்லை. சிலர் தராவிட்டாலும், தொடர்ந்து வேலை நடக்கவிடாமல், மறைமுக, கீழறப்பு இடையூறல்களை இடைவிடாது செய்தும் வருகின்றனர். எனினும், தோழர்.உமர்கயானின் உறுதுணையால் பழனிபாபாவின் வரலாறு நிச்சயம் பரிபூரணம் அடையும், விரைவில்.
இந்தச் சந்திப்பில், ஆளூர் அவர்களுடன் சாலையில் ஒருசேர பேசிக் கொண்டே நடந்ததும், எக்மோர், மதிமுக தலை அலுவலகத்திலிருந்து, கே.கே.நகர் அசோக் பில்லர் வரை அவருடன் ஆட்டோவில் அருகில் அமர்ந்து (இடம் பற்றாமல், தோழர்.உமர்கயானின் காலில் அமர்ந்து கொண்டு பயணித்தேன்)
உரையாடிக் கொண்டே சென்றோம். எங்களுக்கு பேருந்து நேரம் நெருங்கிவிட்டதால், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அன்று அமையவே இல்லை.

எனக்கான, பல பார்வைகளில் உதித்த ஒரு ஆளுமையினுடனான நெருக்கமான அந்த நாட்களை என்றும் நினைவில் கொள்ளத் தக்கது. 

இந்த இடங்களில், என்னை இலக்கியத் தடங்களில் திருப்பிட்ட பாரதி வாசன் அவர்களை குறிப்பிட்டுள்ள நான், தோழர் உமர்கயான் அவர்களை சிறிய அளவில் குறிப்பிட்டு நகர்ந்துள்ளேன். உமர்கயான் தோழரின், தொடர்புகள், பழக்க உறவுகள், தோழமையாய் மாறிப் போன சமபவங்கள், வீழ்ந்தபோது என்னைத் தூக்கிவிட்ட உடன்பிறப்புச் செயல்கள், புரட்சியாளர்.பழனிபாபாவின் நூலிற்க்கான அயராது தனது பலவேலைகளையும் விட்டுவிட்டு என்னோடு அயற்சி அடையாது பயணிக்கும் அவரின் தியாகங்கள், எனக்கான ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவைகள் என பலவற்றையும் விரிவாக, இன்னொரு தருணங்களில் நிச்சயம் பேச வேண்டிய, அவசியம் எழுத வேண்டிய ஒன்று. அதற்கு முன்னோட்டமாய் ஒன்றைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன், அவர் ஒரு போராளித்.தோழர்.

தோழமையுடன்
பழனி ஷஹான்

Monday, 7 July 2014

வாழ்வுரிமைப் போராளி – பழனிபாபா



“சிறுபான்மை மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரத்த குரல் கொடுப்பது ஒரு பெரிய குற்றமென்றால், அந்த குற்றத்தை மீண்டும், மீண்டும் செய்வேன். மதச்சார்பற்ற நாட்டை ஹிந்துஸ்தானமாக்க அதிகாரிகள் செயல்பட்டால் அதனை அடித்து நொறுக்கி நாட்டின் பழம்பெருமை காப்பேன். அதனை குற்றமென்று சொன்னால், அக்குற்றத்தை பலமுறை செய்வேன். மக்களை திரட்டி நியாயம் சொல்லி, நியாயமான ஒரு அரசை கட்டமைக்க எண்ணுவது குற்றமென்றால், அப்படிப்பட்ட குற்றவாளியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்”
என்ற கர்ஜனை வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் அஹ்மத் அலி எனும் இயற்பெயர் கொண்ட பழனிபாபா. 

பழனியை அடுத்த ஆயக்குடியில் முதலாளிக் குடும்பம் என அழைக்கப்படும், மிகவும் செல்வந்தக் குடியில் 14-11-1950-ல் பிறந்தார். குன்னூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, கல்லூரி பயில தனது தாய்மாமன் வீடுள்ள ஆயக்குடியில் தங்கலானார். இக்கல்லூரி காலத்திலே அவர் தனது பொதுவாழ்வை, 1969-ம் ஆண்டைய முஸ்லீம் லீக் மேடை ஒன்றில் துவங்கிவிட்டார். அதன்பிறகு மேற்பட்டிப்பிற்க்காக டெல்லி சென்ற அவர், ஐந்து துறைகளில் முனைவர் பட்டம் பெற்று பின் தமிழக அரசியலில் நேரடியாக களமாடினார்.

பழனிபாபாவின் குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாக இருந்தமையால் அவருக்கு எம்.ஜி.ஆர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரின் மூலம் இந்திராகாந்தி அவர்களின் நட்பும் அவருக்கு ஏற்ப்பட்டது. எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான அரசியலில் அவரை ஆதரித்துச் செயல்பட ஆரம்பித்தார். அன்றைய தினம் எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.க-வை ஆரம்பித்த வேளை அவருக்கு மிகவும் நெருக்கடிக்கள் அரசியல் ரீதியாக ஏற்ப்பட்டது. மேலும், அவரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், கூட பெரிய சவாலுக்கு உள்ளானது. இந்த தருணங்களில்தான் பழனிபாபா அவருக்கு மிகவும் உதவினார். பின்னர் காலப்போக்கில் பழனிபாபா, எம்.ஜி.ஆரால் ஏமாற்றப்பட்டார். 

இந்து முன்னனி எனும் அமைப்பை எம்.ஜி.ஆர் முன்னின்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும், அதனை பாபா எதிர்த்ததும், பின்னர் இதற்க்காக சென்னை கோட்டைக்குள் நுழைய பாபாவிற்கு தடை என்கிற அரசானை அறிவுப்பும், பழனிபாபாவை பலரும் திரும்பி பார்க்க வைத்தது எனலாம். 

ஒருமுறை, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, கலைஞர்.கருணாநிதி அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் சில புகைப்படங்களைக் காட்டி, முதலமைச்சரின் மூக்கின் நேராக விரல் நீட்டி பேசும் அளவிற்கு இவருக்கும், முதல்வருக்கு என்ன நெருக்கமென கேள்வி எழுப்பினார். அந்த சட்டமன்ற விவாதத்தினோடு, அந்த புகைப்படமும் சேர்ந்து மறுநாள் நாளேடுகளில் வெளியானது. அதில் பழனிபாபா, எம்.ஜி.ஆரின் மூக்கின் நேராக விரல் நீட்டி கேள்வி எழுப்பும்படியாக இருந்தது. இதுவும் மிகப்பெரும் சர்ச்சைக்குள்ளாகி பழனிபாபாவை திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆருடன் முரண்பட்ட பழனிபாபா அவரிடமிருந்து வெளியேறினார். பழனிபாபாவின் ஆவேசப் பேச்சுக்களால், அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டார். இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட கலைஞர், பாபாவை தி.மு.க பக்கம் இழுத்துக் கொண்டார். 1985-களுக்குப் பிறகிலிருந்து அவர் 90 கால கட்டம் வரை தி.மு.க-விற்க்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்துள்ளார். இறுதியில், ‘ஹிந்துக்கு ஆபத்து, ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து’ எனும் விசமக் கருத்துக்களை பரப்பும் விதமான இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலய்யரால் எழுதப்பட்ட நூலிற்கு மறுப்பாக பழனிபாபா ஒரு நூலை எழுதினார், இந்த நூலை தடை செய்தது மட்டுமல்லாது, பழனிபாபாவை எட்டு மாதம் சிறையில் அடைத்தார் கலைஞர். இதன்பிறகு தி.மு.க-வினாலும் முதுகில் குத்தப்பட்டார் பழனிபாபா. இவர் எட்டு மாதம் சிறையில் இருந்த கால கட்டத்தில்தான், மருத்துவர்.இராமதாஸ் அவர்களின் நட்பு ஏற்ப்பட்டது. இதன் நீட்சியாக அவர் விடுதலையாகி வெளியே வந்ததும், வன்னியர் சங்கங்களை ஆதரித்தும், பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்தும் களமாடினார்.

தொண்ணூறுகளிலிருந்து அவர் படுகொலை செய்யப்படும் சற்று முன்னர் வரையிலான நாட்கள் வரை அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்காக மிகத் தீவிரமான பரப்புரையை மேற்க்கொண்டார். அன்று பா.ம.க ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட்ட ஒன்றாகத்தான் இருந்தது. சமீபத்திய காலங்களில்தான் அது சாதிய அரசியலை முன்னெடுத்துள்ளது.

பழனிபாபா என்றதும் அவர் ஒரு இசுலாமியத் தலைவரென்கிற மட்டில்தான் பலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் உண்மை அப்படியானதாக இல்லை. அவர் ஒடுக்கப்படும் அத்தனை சமூகத்திற்க்காகவும், தனது வாழ்நாளின் இறுதிவரை போராடியவர். அந்நியப்படுத்தப்படும், தாழ்த்தப்படும் சமூகங்களின் விடியலுக்காகவும், வாழ்வுரிமைகளுக்காகவும் போராடியவர். இசுலாமிய தளத்தில் இருந்து வெளிப்பட்ட எந்த தலைவர்களும் இவரைப் போன்ற தெளிந்த அரசியல் பார்வைகள் கொண்டவர்களாக இருந்ததில்லை. அதனால்தான் இவரின் அரசியல் நடவடிக்கைகள் பலதும், இசுலாமியக் கட்சிக்காரர்கள் சிலராலே அவ்வப்போது விமர்சிக்கப்படது.

‘மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் இந்த இந்து மதத்தின் ஏற்றத் தாழ்வுகளை தாங்கிக் கொள்ளாது, இழிவு நீங்க இசுலாம் எனும் மார்க்கத்தைத்தான் ஏற்றுக் கொண்டோமே தவிர, நாங்கள் அரேபியர்கள் அல்ல. நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள். ஆரிய பார்ப்பன கும்பல்களைப் போல வந்தேறிகளல்ல நாங்கள்” என பழனிபாபா பலமுறை கூறியுள்ளார். இசுலாமெனும் மார்க்கத்தைத்தான் இறக்குமதி செய்தோமே தவிர, நாங்களே இறக்குமதியானவர்களில்லை என்றும் சொல்வார்.

இந்த தெளிவான புரிதல்களினால்தான் பழனிபாபா, பண்முகக் களங்களில் களாமாடினார். வெறுமனே இசுலாமியர்களுக்கு மட்டும் உழைக்காது, குரல் கொடுக்காது, ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசியத்திற்க்காகவும் போராடியவராக இருந்துள்ளார். தமிழக மண்ணிலே ஈழத் தமிழர்களை ஆதரித்துப் முதன்முதலில் சீரடி அரங்கிலே கூட்டம் நடத்தியவர் என்கிற பெருமைக்கும், அதற்க்காக 48-நாட்கள் சிறைப்பட்டவர் என்கிற தியாகத்திற்க்கும் சொந்தக்காரர்தான் பழனிபாபா. இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறாகான நாட்களில் இங்குள்ள பெரும் தலைவர்களெல்லாம், விடுதலைப் புலைகளைப் பற்றியோ, ஈழ மக்களுக்காகவோ பேச அச்சப்பட்டுக் கொண்டும், சிலர் ஒழிந்து கொண்டும் இருந்த கட்டத்திலே பழனிபாபா துணிச்சலாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு, பிரபாகரனுக்கு ஆதரவு தருகிறேனெனப் பேசினார். மேலும் இராசீவ் கொலை வழக்கில் அநீதமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழர்களுக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது, கொலையில் காங்கிரசின் பங்கீட்டையும் அன்றே பேசியவர்தான் பழனிபாபா.
“அடிமைப்பட்டு கிடக்கும் சமூகத்திற்க்கு தனிநாடுதான் (தமிழ் தேசியம்) தீர்வென்றால், அத்தகைய ஒன்றிற்க்காக நாமும் (இசுலாமியர்கள்) சேர்ந்து தியாகம் செய்ய வேண்டியது நமது கடமை” என்ற வண்ணம் வெளிப்படையாக தனித் தமிழர் நாட்டிற்க்காக அன்று ஆதரித்த ஒரே இசுலாமிய மதம் தாங்கிய தலைவர் இவர் மட்டும்தான். மறைந்த.காயிதே மில்லத் அவர்கள் ஒருமுறை பாராளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென குரலெழுப்பியுள்ளார். மற்றபடி இனத்தின் அடிப்படையில் அரசியல் செய்த ஒரே இசுலாமியத் தலைவர் பழனிபாபா மட்டும்தான்.

இதனால்தான், பாவலரேறு.பெருஞ்சித்திரனார், நெடுமாறன், தமிழரசன், விடுதலைப் புலிகள் தலைவர்.பிரபாகரன், போன்ற தமிழ் தேசிய போராளிகளுடனும், மருத்துவர்.இராமதாஸ், மருத்துவர்.சேப்பன், தலித் எழில்மலை, பேரா.தீரன், பேரா.கல்யாணி, பேரா.அ.மார்க்ஸ், தொல்.திருமாவளவன், ஜான்பாண்டியன், பசுபது பாண்டியன் போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான அரசியலை முன்னெடுப்போர்களின் உடனுமே அதிகம் பயணித்தாரே ஒழிய, வெறுமனே இசுலாமியர்கள் என்கிற மட்டில் அவர் என்றுமே சுருங்கியதில்லை. இவரின் இன்னொரு அரசியலானது மிகவும் கூர்நோக்கிய பார்வை கொண்டது. இன்று இங்கு தலித்துகளுக்காக பேசுபவர்கள், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்காக குரலெழுப்புவதில்லை. அதேபோல பிற்ப்படுத்தப்பட்டோருக்கான அரசியல் செய்வோர் தலித்துகளுக்காகவோ, சிறுபான்மையினருக்காகவோ பேசுவதில்லை. ஆனால் பழனிபாபா என்கிற அரசியல்கர்த்தா, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அத்துனை சமூகங்களையும் ஒன்றிணைத்து, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியவராக இருக்கின்றார். மத நல்லிணக்கம் என்பது இயலாதது, சமூகங்களிடையே நல்லிணக்கம்தான் சாத்தியம் என்கிற புரிதலையும் கொண்டிருந்தார்.

இவர் மீது வன்முறையாளர், தீவிரவாதி என்கிற ஒரு பொதுச் சித்திரம்தான் இன்று இம்மண்ணில் வரையப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவாரங்களின் ஒப்பாரிகள்தானே ஒழிய வேறொன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு என்றுமே நேதாஜி அவர்கள் தீவிரவதிதான், பகத்சிங் தீவிரவாதிதான். அந்த வகையில் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பழனிபாபா தீவிரவாதிதான். உயர்திரு.பெரியார் அவர்கள் இம்மண்ணில் பார்ப்பனியத்திற்கு எதிராக எவ்வாறு களமடினாரோ, அதேபோன்றதொரு களத்தைத்தான் பழனிபாபாவும் பார்ப்பனர்களுக்கு எதிராக முன்னெடுத்தார். பெரியாரையும், அம்பேத்கரையும் மிகவும் உயர்த்திப் பிடித்தவர் பழனிபாபா.
“புனித பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா?, ஹிந்துக்கு ஆபத்து ஹிந்துஸ்தனத்திற்கு ஆபத்து – இராமகோபாலய்யருக்கு மறுப்பு, WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID?,போன்ற புத்தகங்களையும்” “அல்முஜாஹித், முக்குல முரசு, புனிதப் போராளி’ போன்ற பத்திரிக்கைகளையும் நடத்தினார்.

புனித பைபிளில் உள்ள பல முரண்பட்ட கருத்துக்களை சில மேடைகளில் பேசியுள்ளார். அதேசமயம் அவர் கிருத்துவ புனித நூலில் உள்ள முரண்பாடுகளைத்தான் சாடினாரே ஒழிய கிருத்துவர்களை அல்ல. ஒருமுறை ஈரோட்டில் தலித் கிருதுவர்கள் தேவாலத்தியத்திற்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதனை அறிந்தவர், உடனே அங்கு சென்று தேவாலயத்தின் முன்பு நுழைவுப் போராட்டம் நடத்தியவராகவும், தலித் கிருத்துவர்கள் செல்ல சிறைப்பட்டவராகவும் இருந்துள்ளார்.

மேலும் பழனிபாபா என்றதும் இன்னொரு பிம்பும் திட்டமிட்டு பரப்படும். அது அவர், செல்லும் இடமெல்லாம் இந்துக்களை மதமாற்றம் செய்தார் என்கிற குற்றச் சாற்றாகும். ஆனால் உண்மை என்னவெனில், பழனிபாபாவினோடு பல ஆண்டுகள் உடன்பயணித்த மருத்துவர் சேப்பன் தன்னுடைய நூல் ஒன்றிலே குறிப்பிடுகிறார், பாபா ஒருபோதும் இசுலாத்திற்கு அழைக்கமாட்டார், அவர் இசுலாத்தின் மாண்புகளை மட்டும்தான் பேசுவார். அதில் தெளிவுபெற்றவர்கள் இசுலாத்தினை மேடைக்கே வந்து ஏற்றுக் கொள்வர். இத்தனை ஆண்டுகள் உடனிருந்து என்னைக் கூட அவர் இசுலாத்திற்கு அழைக்கவில்லை, மாறாக மாண்புகளைக் கூறியுள்ளார், என்கிற வண்ணம் பதிவு செய்துள்ளார். இது இந்துத்துவச் சக்திகள் பழனிபாபாவின் மீது தூற்றும் இன்னொரு பழி சொல்லுக்கான தெளிவான உண்மையான பதிலடியாகும்.

இறுதியாக பழனிபாபாவின் மீது இசுலாமிய மற்றும் பொதுச்சமூகங்களின் விமர்சனங்களானது, ‘அவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்தார் என்பதும், தனக்குப் பின், தன்னுடைய பார்வையில் பின் தொடரும் தேர்ந்த தலைமைகளை உருவாக்காமல் சென்றுவிட்டார் என்கிறவைகள்தான். இது இரண்டுமே அவருக்கு இயலாத காரியமாக போயிற்று. தொடர்ந்து கூட்டம், சிறை, வழக்கு, பாதுகாப்பற்ற சூழல், மேலைநாட்டுப் பயணங்கள், இப்படியாக அவரின் பொதுவாழ்வு மிகவும் துன்பகரத்திற்க்குள்ளானதாக இருந்துள்ளது. மேலும் இன்னொன்று அவர் ஒரே ஒரு இடத்தில் இமானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டதில் பசும்பொன் தேவர் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று பேசியுள்ளார். இது பழனிபாபாவின் மீது ஒரு சின்ன சங்கடத்தை சிலருக்கு ஏற்ப்படுத்தும் விதமாக இருக்கலாம். ஆனால் அவர் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டது அநீதியென்றும், அவர் ஒடுக்கப்படும் சமூகங்களுக்காக போராடியவர் என்பதிலும் மாற்றுக் கருத்து கொண்டவரல்ல.

தனது வாழ்நாளில் 5147 மேடைக் கூட்டங்களில் பேசியும், 137 வழக்கும், 125முறை சிறையும், அதில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில். மூன்று முறையும், தடா சட்டத்தில் ஒருமுறையும் அடங்கும். இந்திய வரலாற்றிலேயே சிறைக்கே செல்லாமல், வெளியில் இருந்து கொண்டே நீதிமன்றத்தின் மூலம் தடா வழக்கை முறியடித்த வரலாறு பழனிபாபாவிற்கு மட்டுமே உண்டு. வழக்கறிஞர்களில் இவர் அளவுக்கு வழக்குள், சிறைகள் கண்டவர்களும் இங்கு கிடையாது. மேற்ப்படி 137 வழக்குகளிலும் நிரபராதியாக, குற்றம் நீருபிக்கபடாமலே விடுதலையாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இசுலாமியக் களம், தமிழ் தேசியக் களம், ஈழத்தமிழர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவு, தேசிய இனச் சிக்கல்கள், வட இந்தியத் தமிழர்களுக்கான குரல், பிற்ப்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான அரசியல், இன ரீதியான அர்ப்பணிப்பு, மொழிப்பற்று, இடுக்கிற்க்குள்ளாகும் உலக அளவிலான இனத்திற்க்கான குரல், பார்ப்பானிய எதிர்ப்பு, ஏகாதிபத்தியச் சாடல், தான் சார்ந்த சமூகத்தின் மேல் இருக்கும் குறைகளையும் பொது வெளியிலயே சுய விமர்சனம் செய்யும் பாங்கு என பண்முகக் களங்களில் பேசி, போராடி மாய்ந்தவர் பழனிபாபா.

இறுதிவரை பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர்.இராமதாஸை எவ்வளவோ நம்பி பிறகு அவராலும் ஏமாற்றப்பட்டார். அதனால்தான் அவர் 1996 சட்டமன்றத் தேர்தலோடு பா.ம.க-விற்க்கான இறுதி ஆதரவை நிறுத்திக் கொண்டார். இதன்பின்னர் தன்னுடைய கருத்தியலின் மூலம் தானே ஒரு அரசியல் கட்சியினை தொடங்க திட்டமிட்டு ஆவேசப் பேச்சுக்களைத் தவிர்த்து விவேக நடவடிக்கைகளில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் அவர் பொள்ளாச்சியில் தனது நண்பர் தனபாலின் வீட்டில் இருந்து வெளியேறி தனது ஜீப்பில் ஏற முயலும் தருணத்தில், இரவு ஏழு, ஏழரை மணியளவில், ஜனவரி 28, 1997-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினாரால் படுகொலை செய்யப்பட்டார்.

வரலாற்றில் பழனிபாபா என்பவர், பல கட்சிகளை நம்பி ஏமாந்தவராக உள்ளார். தன்னுடைய சமூகத்திற்கு, இனத்திற்கு, ஒடுக்கப்படுதலில் இருந்தும், அந்நியப்படுத்தப்படுதலில் இருந்து ஒரு விடிவை வேண்டியே அவர் அரசியல் கட்சிகளை ஆதரித்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராகக் கூட இருந்திருக்கவில்லை. மக்களின் நலனுக்காகா கட்சிகளை நம்பி, நம்பி ஏமாற்றப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை மக்களே விழிப்புணர்வு கொள் என்றுதான் சொல்வேனே தவிர, மரணம் வந்துவிட்டதே என அஞ்சிடப் போவதில்லை, இலட்சியவாதிகளுக்கு ஏதடா மரணம்? என முழக்கமிட்டபடியே வாழ்ந்தவர்.

எதிரிகளின் கைகளால், வெட்டுப்படுச் சாகும் வீரமரணம்தான் வேண்டுமென மேடைகள் தோறும் அவர் வேண்டியபடியே, அவர் இத்தேசத்தின் நாசகரச் சக்திகளின் கைகளால் 16 வெட்டுக்கள் சரமாரியாய் தாங்கி குடல் சரிந்து வீர மரணத்தை எய்து, ஆயக்குடி மண்ணிலே விதையாய் புதைக்கப்பட்டுள்ளார்.

தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்படுவோருக்கும், பிறப்பால் இழிபழி சுமத்தி தாழ்த்தப்பட்டோருக்கும், பேரினவாதிகளால் சூறையாடப்படும் சிற்றினத்தாருக்குமான சம அந்தஸ்துடைய வாழ்வாதரங்களை முன் வைத்து சுழன்ற வாழ்வுரிமைப் போராளி பழனிபாபா.!


நன்றி : கலகம் மாத இதழ்
(மே-2014 கலகம் இதழில் வெளியான கட்டுரை இது)

மேலும் இதனை இணைய இதழில் வெளியிட்ட புனிதப் போராளிக்கும் நன்றி!
தளம் : http://punithaporali.com/?p=165
தோழமையுடன்
பழனி ஷஹான்