Tuesday, 7 November 2017

மோடி ஏன் நமக்கானவர் அல்ல? - நூல் வெளியீட்டு விழா

மோடி ஏன் நமக்கானவர் அல்ல?” நூலின் வெளியீட்டு விழா கடந்த  07.10.2017 சனிக்கிழமை அன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.



பாரதி புத்தகாலயம் மற்றும் ரிவோல்ட் பதிப்பும் இணைந்துஇவை சொல்லும் அரசியல் என்ன?” என்கிற தலைப்பில் கருத்தரங்கொன்றினை நடத்தியது. 1997 நவம்பரில் கோவை நகரில் நடந்த கலவரம் மற்றும் பிப்ரவரி 1998இல் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் கோர சம்பவங்களை மையப்படுத்தி வெளிவந்த “கறைபடிந்த காலம், மெளனத்தின் சாட்சியங்கள், தாழிடப்பட்ட கதவுகள் மற்றும் கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” ஆகிய நூல்களை முன்வைத்து இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் நீட்சியில் நான் (பழனி ஷஹான்) எழுதிய “மோடி ஏன் நமக்கானவர் அல்ல?” என்கிற நூலின் வெளியீட்டு விழாவும் நிகழ்ந்தது. இதேபோல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசரின் வாய்மொழி சாட்சியத்தில் என்னுடைய எழுத்தாக்கத்தில் உருவான “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூலின் இரண்டாம் பதிப்பும் (பாரதி புத்தகாலயம்) இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.



மோடி ஏன் நமக்கானவர் அல்ல?” நூலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வெளியிட ,எழுத்தாளர் பசு.கவுதன் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் பேராசிரியர் .மார்க்ஸ் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் கீரனூர் ஜாகிர்ராஜா, புலியூர் முருகேஷன், சண்முகசுந்தரம், வெற்றிச்செல்வன், இனியன், பிர்தவ்ஸ் இராஜகுமாரன், சம்சுதீன் ஹீரா, .கரீம், பேராசிரியர் .செல்வகுமார், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஜி.நீலமேகம், கலை இலக்கியப் பெருமன்ற பொதுச்செயலாளர் இரா.காமராஜ், மக்கள் அதிகாரம் காளியப்பன், வெற்றித் தமிழர் பேரவை இரா.செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




எழுத்தாளர் பசு. கவுதமன் தலைமை வகித்த இந்நிகழ்வை,  .மு... மாநில துணைச் செயலாளர் களப்பிரன் ஒருங்கிணைத்தார். இறுதியில் பாரதி புத்தகாலயம் ஹேமாவதி நன்றியுரையாற்றினார்.  

No comments:

Post a Comment