Thursday, 5 October 2017

கோவை கலவரத்தில் எனது சாட்சியம் - இரண்டாம் பதிப்பு

ஜூன் 2016இல் ஆழி பதிப்பகத்தின் மூலம் முதல் பதிப்பைக் கண்ட “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல், இப்போது பாரதி புத்தகாலயத்தின் வெளியீட்டில் இரண்டாம் பதிப்பை அடைந்திருக்கிறது.



முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான (1996 - 2001, புவனகிரி தொகுதி, தமிழ்நாடு) ஏ.வி.அப்துல் நாசரின் நேரடி கள அனுபவங்களின் தொகுப்புதான் இந்நூல். அவரின் வாய் மொழிச் சாட்சியத்தை, நான் எழுத்தாக்கம் செய்துள்ளேன். கோவை கலவரம் (நவம்பர் 1997) மற்றும் குண்டுவெடிப்பின் (பிப்ரவரி, 1998) பின்னணி அரசியல் குறித்து, அதில் பாதிப்படைந்தவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை மேற்கொண்டது குறித்தும் நாசர் இந்நூலில் விரிவாக பகிர்ந்துள்ளார்.




இந்நூலின் இரண்டாம் பதிப்பு, பாரதி புத்தகாலயத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

தோழமையுடன்
பழனி ஷஹான்

Wednesday, 4 October 2017

மோடி ஏன் நமக்கானவர் அல்ல? - பழனி ஷஹான்

மோடி ஏன் நமக்கானவர் அல்ல?” என்கிற எனது நெடுங்கட்டுரை நன்செய் பிரசுத்தின் வெளியீட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய ஜி. ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையோடு குறுநூலாக வெளிவருகிறது.

-பழனி ஷஹான்
--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்நூலின் முன்னுரையிலிருந்து சில வரிகள் :

பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் மத்தியில் ஆளும் பா... அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது, அதனுடைய விளைவுகள் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பழனி ஷஹான் தனது கருத்துகளை இச்சிறுநூலில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.  2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற மோடி அரசு ஜூன் மாதத்தில் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை அழித்திருக்கிறது. அங்கிருந்த ஆவணங்களில் மகாத்மா காந்தியின் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களும் இருந்தன. இந்தச் செய்தி வெளியானபோது, அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோப்புகள் அழிக்கப்படுவதற்கான காரணங்களையும் அழிக்கப்படும் கோப்புகளின் பெயர்களையும் ஆவணக்காப்பகத்தோடு கலந்து ஆலோசிக்க வேண்டுமென்றும் இது தொடர்பான சட்டப்பிரிவு 113 கூறுகிறது. ஆனால் மோடி அரசு இதில் ஒன்றைக்கூட பின்பற்றவில்லையென்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
குஜராத் மாடல் இந்தியா முழுமைக்கும் அமலாக்கப்படும் என்றார் மோடி. குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மாடல்தான். தமிழகத்தில் சமீபத்தில் ஜி.எஸ்.டி. வரித் திட்டம் அமலாக்கப்பட்டபோது, வேறு பல மாநிலங்களை விட குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தலித் மக்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில தலித் மக்கள் எழுச்சியுற்றுப் போராடியதை நாடே பார்த்தது. இவ்வாறு மோடி அரசின் 3 ஆண்டு கால செயல்பாடு பற்றி ஏராளமான துல்லியமான விவரங்களோடு நல்ல நடையில் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். மோடியின் ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் உதவியாக இருக்கும்.
ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு