கருத்து சுதந்திர அடிப்படையில், திரைப்பட இயக்குநர். திரு. சீனு ராமசாமி அவர்கள் மீதான என் விமர்சன மற்றும் வினா தொகுப்பு இது.
“யாரை திருப்த்திபடச்
செய்கின்றார்” எனும் கேள்வி பதத்தோடு பொருந்திய தலைப்பிற்கு, நான் முதலில் இட்ட பெயர்
“மனைவியை நேசிக்க கற்று கொடுத்தது இஸ்லாம்- மத நல்லிணக்கத்தின் உறைவிடம் இஸ்லாம் –
சீனு ராமசாமியின் மன நெகிழ்வு” என்பதாகும். இவ்வாறு அவரின் திறந்த பெருந்தன்மையோடு
பொருந்திய கருத்துகளுக்காக, அக மகிழ்வோடு ஆரம்பத்தில் இத்தலைப்பிட்டேன். பின்பு நான்
ஏன் தற்போதைய தலைப்பை இட்டேன் ? முன்பு நான் ஏன் அவரை அப்படி கருதினேன் ?
தென்மேற்கு பருவக்காற்று,
நீர் பறவை போன்ற திரைப்படங்களின் இயக்குநரும், தேஷிய விருதும், பழநி பாபா மத நல்லிணக்க
விருதும் பெற்ற திரு.சீனு ராமசாமி அவர்களின் மனிதநேயம் பறவையாய் பறந்ததை அனைவரும் அறிந்ததே.
நானும் அப்படிதான் பார்த்தேன் அந்த மனிதரை. ஆனால் அவர் பற்றி ஓர் வாழ்த்து கட்டுரை
வரைய ஐயப்பட்டு, பேனாவும் எடுத்து துவங்கியும் விட்டேன்.
ஆனால் என் ஐயப்பாடு,
ஐயத்திற்க்குள்ளாகிவிட்டது. என் அவா, ஆவேஷமாக மாறியதன் காரணம்தான் என்ன? முதல் நாள்
புகழ்ச்சியுரையும், மறு நாளே வருத்த உரையும் என்னுள் அவர் பற்றி எழக் காரணங்கள் அவரின்
இரண்டு முரணான கருத்து உரைகள். அவைகளை இதில் இடுகின்றேன். எனினும் அவரைப் போன்றோரை
தாழ்த்தி எழுத நான் விருப்பம் கொண்டவனல்ல.
இரண்டு முரனான
கருத்து உரைகள், ஒன்று அவர் கடந்த 28-01-2013 அன்று பழநி ஆயக்குடியில், ‘பழநி பாபா
மத நல்லிணக்க விருது’ பெற்று பின் அவர் ஆற்றிய உரை.
அதில்
அவர் பேசுகின்றார் ;
“இஸ்லாம் மதம் அன்று அது மார்க்கம்”, நான் எனது
நீர் பரவை திரைப்படத்திற்க்காக, இரண்டு வருடம் திருக்குர் ஆன்-உம், பைபிளும் படித்தேன்.
திருக்குரான் என் வாழ்வில் ஓர் மாற்றம் கொடுத்தது, திரைப்படமே வெளிப்படையாக எடுத்துவிட்டேன்
பின் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசுகின்றேன். நான் என்னதான் மார்க்ஸியம், பெரியாரிசம்
பேசினாலும், சராசரி மனிதன் எனும் ரீதியில் எனக்குள் நிற பேதமை இருந்தது. என் மனைவி
சற்று கருப்பு. எனவே நான் அவருடன் சரிவர முகம் கொடுக்காமல் ஒரு பாராமுகமாகவே இருந்து
வந்தேன். பெற்றோர் பார்த்து முடித்த திருமணம். பின்புதான் திருக்குரான் படித்து கொண்டிருந்த
போது அதன் ஓர் வசனம் எனக்கு உண்மை உரைத்தது.
“நபியே நீர் கூறும்! அழகற்ற பெண்கள் என்று
நீங்கள் யாரையும் வெறுத்து ஒதுக்கி வைக்கதீர்கள். அளவிடற்கரிய நற்குணங்களை அல்லாஹ்
அவர்களிடத்தே பொதித்து வைத்துள்ளான். மறைவானவற்றை அல்லாஹ் நன்கு அறிவான்.“
-திருக் குரான்.
என்ற திருக்குரான்
உடைய வசனத்தை அவர் மேற்க்கோள் காட்டினார். மேலும், அவர் தனது நீர்-பறவை படம் தனி மனித
வெற்றியல்ல அது ஒரு சமூகத்தின் அடையாளம். நான் வளர்ந்து வரக் காரணம் என் தமிழ் ஆசிரியர்
ஜாபர் ஐயா அவர்கள். என் உயர் கல்விக்கு உதவியர் ஒரு கிறிஸ்துவர். என் முதல் விளம்பர
பட இயக்கத்திற்கு வாய்ப்பளித்தவர் ஒரு இஸ்லாமியர். அவர்களின் உதவிதான் நான் வெளிவந்தேன். அதற்க்கான
ஒரு நன்றி கடன் தான் நீர்-பறவை. அதன் எதார்த்தம் தான் இத்திரைப்படம். நான் இப்படி ஒரு
படமெடுத்து முஸ்லீம்களிடம் பாராட்டு, பரிசு பெற வேண்டும் என்று கதை எழுதவில்லை. உண்மையில்
அந்த கதாபாத்திரம் அங்கு, அந்த தருணம் என்ன பேசுமோ அதைத்தான் படமாக்கி உள்ளேன். பின்
தன் நீர்-பறவையின் முத்திரையிட்ட, போற்றுதலுக்குரிய காட்சியான, உதுமான் கனி எனும் கதாபாத்திரத்தின்
அந்த உரையை சுட்டி காண்பித்தார்.
மேலும் அவர் தொடர்கையில் ; கப்பலை முதன் முதலில் இந்தியாவில் கட்டியவர்கள்
மரைக்காயர் முஸ்லீம்கள் அந்த வரலாற்று உண்மையைத்தான் என் நீர்-பறவை காட்சிபடுத்தியுள்ளது.
ஆனால், ஏனோ தெரியவில்லை தமிழ் சினிமாக்களில் முஸ்லீம்களை, கடற்கொள்ளையர்களாகவும், ஷேட்-களாகவும்,
வாசனைப் பொருள் விற்பன்னர்களாகவும் தொடர்ச்சியாக தவறாக காட்டி வருகின்றனர்.
எனக்குள் ஒரு ஏக்கம்
இருந்தது, என் நீர்-பறவை திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் ஒரு நன்றி கூட கூறவில்லையே
என்று. ஆனால் அதனை திரு.கே.எம்.ஷரீஃப் அவர்கள் நிறைவேற்றி விட்டார். எனக்கு மிகுந்த
ஆச்சரியமாக உள்ளது நான் ஒரு சிறு உண்மை நிலையை காட்ச்சி படுத்தியதற்க்கு இஸ்லாமியர்கள்
நீங்கள் இவ்வளவு விழா எடுத்து பாராட்டுகின்றீர்கள். நான் தேஷிய விருது வாங்கியது கூட
எனக்கு பெருமையல்ல. ஆனால் சமூக போராளி பழநி பாப மத நல்லிணக்க விருது நான் பெற்றது தேஷிய
விருதை விட பெருமையாக உணர்கின்றேன். ஏனென்றால் தேஷிய விருது சமூக போராளிகளால் கொடுக்கப்படுவதில்லை.
மக்களிடம் சமூக நல்லிணக்கம் இருக்கின்றது என்பதையே இந்த நீர்-பறவை வெற்றி குறிக்கின்றது.
ஆனால் அது சில அரசியல்வாதிகளிடம் தான் இருப்பதில்லை. பின் இறுதியாக, சமூக நல்லிணக்கத்தின்
உறைவிடம் இஸ்லாம்-தான் என்று கூறி கலீஃபா உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை
குறிப்பிட்டார்.
“ஒரு முறை ஹஜ்ரத்,
கலீஃபா உமர்(ரலி) அவர்கள் ஜெரூசலத்தின் அதிபராக இருந்த தருணம், உமர் கிருஸ்த்துவ ஃபாதிரிமார்களின்
வேண்டுகோளுக்கிணங்க ஓர் கிறிஸ்த்துவ ஆலயத்திற்க்குள் சென்றார். அப்பொழுது தொழுகை நேரம்
வந்ததும், உமர் அவர்கள் அதனை அவர்களிடத்தில் தெரிவித்தார். உடனே கிறிஸ்த்துவர்கள் தேவாலயத்தை
சுத்தம் செய்து அங்கு உமரை தொழுமாறு பணிந்தனர். ஆனால் உமர் அதனை மறுத்து வெளியில் வந்து
வெட்டாந்தரையில் தொழுதார். பின் அங்கு நடந்த விருந்தொன்றில் பங்கு கொண்ட உமர் அவர்களிடம்,
ஃபாதிரிமார்கள் கேட்டனர், உமரே! தாங்கள் இவ்வளவு அந்நியோன்யமாக பழகுகின்றீர்கள் ஆனால்
ஏன் எங்கள் தேவாலயத்தில் தொழ மறுத்தீர்கள், அங்கு சுத்தமாக தானே இருந்தது என்று வினவினர்.
அதற்கு உமர் அவர்கள் கூறினார்கள், இன்னும் நூறு வருடங்களுக்கு பின் தாங்களும் இருக்கப்
போவதில்லை, நானும் இருக்கப் போவதில்லை அந்த வேளை உள்ள தலைமுறை உமர் எப்படி இங்கு தொழுதார்
என்று கேள்வி கேட்க்கும், மற்றொருவர் இது உமர் தொழுத இடம் என உரிமை கோர, அங்கு அமைதி
குலையும், ஒற்றுமை சீர்கெடும் என்று பதிலுரைத்தார்கள்”.
எனும் இந்த வரலாற்று
சம்பவத்தை கூறி, மேலும் சமூக நல்லிணக்க முன்னோடிகள் முஸ்லீம்கள்தான் என்றும் கூறி தன்
உரையை முடிவு செய்தார்.
ஆக இப்படியான,
இவரின் யதார்த்தமான, பொதுவுடைமையான, சமூக சிந்தனை பொதிந்த, நன்றி உணர்வு வெளிப்பூண்ட,
உண்மை நிலையை விளக்கிய உரையை கேட்டு வியப்புற்றேன். அதற்கு நம்மால் ஆன நன்றி பாராட்டை,
கட்டுரையாக தீட்ட வேண்டும் என எண்ணி, நான் குறிப்பிட்ட தலைப்பை இட்டேன். அதன் விதமாக
என் கட்டுரையை ஓரளவு எழுதிவிட்டேன் ஆனால் தீடீர் இடை நிறுத்தம் செய்தேன், காரணம் அவர்
சமூக நல்லிணக்க விருது பெற்ற மறுநாள், 29-01-2013 அன்று நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த,
புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின், நேர்பட-பேசு
நிகழ்வில் திரு.சீனு ராமசாமி அவர்கள் கூறிய விஸ்வரூபம் திரைப்படம் குறித்தான கருத்துதான்.
29-01-2013 அன்று அவர் புதிய
தலைமுறையின் நேரலை நிகழ்வில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து கூறிய கருத்து :
“கமலஹாசன் அவர்கள், இஸ்லாமியர்களுக்கு திரைப்படம்
முன்னதாகவே காட்டியது தவறான செயல். எனது நீர்-பறவை படம் வெளிவராத நிலையில், கிறிஸ்த்துவர்கள்
சிலர் என்னிடம் வந்து அதில் இடம்பெற்றுள்ள பாடலில், விபிலிய மொழிகளில் வார்த்தைகள்
அமைந்துள்ளதாகவும், ஆகவே அவைகளை நீக்கி விடவும் கோரினர். நானும் அவர்களின் வேண்டுதலுக்கு
செவி சாய்த்து அவைகளை நீக்கினேன். பின் அவர்கள் என்னிடம், பாடல் வரிகள் இப்படி இருப்பதால்,
படத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது ஆகவே எங்களுக்கு முழு படமும் போட்டுக் காட்ட வேண்டும்
என்றனர். ஆனால் நான் அதை ஏற்க்கவில்லை. அவர்களுக்கு படத்தை முன்பே காட்ட உறுதியாக மறுத்து திரையிட்ட பின் பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறிவிட்டேன்.
என்ற வண்ணம் தன்
முதல் கருத்தை பதிவு செய்தார்.
பின் அவரிடம் தனிக்கை
குழு பற்றி வினவப்பட்டது.
அதற்கு அவர், தணிக்கை குழு முறையாக உள்ளது என்றார்.
மேலும் அவர், தன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கிய போது மிக நுனுக்கமாக ஆராய்ந்து
சான்று வழங்கினர். எனவே தணிக்கை குழு முறையாகத்தான் செயல்படும் என்றார்.
இறுதியாக அவரிடம்,
முஸ்லீம்கள் பற்றிய, தமிழ் சினிமாக்களின் தவறான சித்தரிப்பு பற்றி கேட்டதற்கு அவர்:
ஆம் அது உண்மைதான். ‘நிம்மல் பொன் தரான், நிம்மலுக்கு
பொண்னு தருது’ என்று ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவுமே காட்டி வந்துள்ளனர், என்று
கூறி பின்;
தங்களை பற்றி இப்படி திரைப்படம் எடுத்ததற்கு இவ்வளவு
கண்டனம் தெரிவிக்கும் முஸ்லீம்கள், ஏன் என்னுடைய நீர்-பறவை திரைப்படத்திற்கு ஒரு நன்றி
கூட தெரிவிக்கவில்லை என்று கேட்டு விடபெற்றார்.
ஆனால், இக்குற்றச்சாட்டை, அந்த நிகழ்வில் அவரோடு
பங்கு கொண்டிருந்த, த.மு.மு.க இயக்க தலைவர் திரு.ஹைதர் அலி அவர்கள், தாங்கள் ஏற்கனவே
நன்றி பாராட்டு அறிக்கை அளித்துள்ளதை சுட்டிக் காண்பித்தார்.
இங்குதான் நான் அவரிடம் வினவுகின்றேன் ‘யாரை திருப்தியடையச்
செய்ய நினைக்கின்றீர்கள் ?’ .
v
சமூக
நல்லிணக்க விருது பெற்று தாங்கள் ஆற்றிய உரை யாரை திருப்திபடுத்த ?
v
மறுநாள்
புதிய தலைமுறையில் தாங்கள் கூறிய கருத்துக்கள் யாரை திருப்திபடுத்துவதற்கு ?
திரு.சீனு-ராமசாமி அவர்களுக்கு என் விளக்கங்களும், வினாவும் :
ü
ஆயக்குடி
உரையில் தாங்கள், தங்கள் படத்திற்க்காக தங்களை யாரும் பாராட்டவில்லை, இதுதான் முதல்
முறை என்றீர்கள், “சமூக நல்லிணக்க விருது பெற்ற பின்னர். ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்,
அதற்கு முன்பாகவே த.மு.மு.க போன்ற இஸ்லாமிய இயக்க தலைவர்கள் நீர்-பறவையை வரவேற்பதாக
பதிந்து விட்டனர்.
ü
மேலும்,
எழுத்தாளர், அண்ணன், ஆளூர்.ஷானவாஸ் அவர்கள் தன் வலைப்பூத்தளத்தில், ‘முஸ்லீம் தீவிரவாதி
இல்லாத நீர்-பறவை’ எனும் தலைப்பில் ஒரு பாராட்டு கட்டுரை எழுதி உள்ளார்.
ü
இதற்கும்
மேலாக, என் முக நூல் நண்பர்கள், முக நூல் பயனர்கள் தங்களின் நீர்-பறவைக்கு எழுத்து
பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதில் நானும் ஒருவன். மேலும், பலர் அந்த
குறிப்பிடப்படும் ‘உதுமான் கனி’ கதாபாத்திரத்தின் வசனம் அடங்கிய வீடியோ காட்சிகளை தங்கள்
முக-நூலில் பகிர்ந்தும், அது குறித்த,சம்பந்தப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டும் உள்ளனர்.
ஆகவே, 28-01-2013 அன்று
அல்ல, நீர்-பறவை காட்சிக் கோப்பு டிரெய்லர் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சில தினங்களில்
சிறிது, சிறிதாகவும், படம் திரைக்கு வந்த பின்பு தினம், தினமும் இஸ்லாமியர்கள் தங்களுக்கும்,
தங்கள் நீர்-பறவைக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அறிவித்து கொண்டே உள்ளனர்.
v
இஸ்லாமியர்களை
ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவும், வாசனை பொருள் விற்பன்னர்களாகவும் காட்டியதை
குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மைதான். நீங்கள் கூறும் அதே சினிமா கால கட்டத்தில், எம்.ஜி.ஆர்,
சிவாஜி போன்றோரின் திரைப்படங்களில் இயல்பாகவும், உயர்வாகவும் முஸ்லீம்களை காட்சிபடுத்தி
உள்ளனர்.
v
ஆகவே
தாங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சித்தரிப்பு கதாபாத்திரங்கள் பெரிய பொருட்டல்ல.
1990-களிலே பொய்மைப்படுத்தி, இதுவரை காட்சிப்படுத்தபட்டு வருகின்ற, இஸ்லாமிய வன்முறையாளர்கள்,
தீவிரவாதிகள் எனும் சித்தரிப்புகள்தான் இங்கு கவனிக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது,
முக்கியமளிப்பது.
v
90-களுக்கு
முன்பு அது ஒரு பெரிய சித்தரிப்புகள் அல்ல. நீங்கள் ஆதரவு அளிப்பதாக எண்ணி அவைகளை கூறி
நழுவுவது முறையல்ல. நீர்-பறவை திரைப்படத்தில் நெற்றி அடியாக உண்மை கூறீனீர்கள், ஆனால்
ஏன் நேர்பட பேசுகையில் உண்மை சர்ச்சையை வெளிக்கொணராமல் பேசினீர்கள் என்பதில்தான் என்
கேள்வி தொக்கி நிற்கின்றது.
§
இறுதியான
ஒரு விளக்கம், தங்கள் நீர்-பறவை திரைப்படத்தில் கிறிஸ்த்துவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
அதில் சில பாடல் வரிகளை நீக்கினீர் என்றீர்கள். அருமையான ஒன்றுதான். ஆனால் ஒட்டு மொத்த
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பு எதிர்த்து சில காட்சிகள் நீக்கப்பட கோர, திரைப்படம்
முன்னதாக காட்டப்பட்ட நிகழ்வை தாங்கள் எதிர்ப்பது சரியல்ல. இது ஒரு வேளை வெளியில் வந்தால்
இந்தியாவில் காவிகளின் பிரச்சாரம் எப்படி இருக்கும்? வெகுஜன மக்களின் இஸ்லாமிய பார்வை?
இவைகளை தாங்கள் சிந்திக்க வேண்டும். ஆக அவைகளை களையவே இந்த முன்னேற்பாடு. ஒருபுறம்
தாங்கள் முஸ்லீம்களை திரைப்படத்தில் கண்ணியமயப்படுத்திவிட்டு, நிஜப் போக்கில் இப்படி
கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது? மக்கள் சினிமாவை சினிமாவாக பார்பதில்லை, அதன் நட்சத்திரங்களின்
பேச்சுகளை வெகுஜன மக்கள் ஆராய்வதில்லை. ஆக இதன் பிரதிபலிப்பு, தாக்கம் எப்படி என்று
பலரும் அறிந்ததே.
§
மேலும்
தங்கள் படத்தில் நீங்கள் நீக்கியது விபிலிய மொழியில் உள்ள வரிகளைத்தான், மாறாக அது
பைபிளின் வசனங்களல்ல. ஆனால், விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குரான் வசனம் இடம் பெற்றுள்ளது.
எது தங்களின் வாழ்வில் தங்கள் மனைவியை நேசிக்க வைத்ததோ அந்த புனித நூலின் வசனங்கள்
விஸ்வரூபத்தில் இடம்பெற்றுள்ளன. உலகில் இரண்டாவது பெரிய மார்க்கமான இஸ்லாமியர்களின்
இறை வார்த்தைகள் அதில் வரிசைபடுத்தியுள்ளார் அப்பட இயக்குநர்.
§
எனவே,
நீங்கள் அவருக்கு பகிரங்கமாக கண்டனம் பகிர்வது ஏற்புடையதே தவிர, மறைமுக ஆதரவு குரல்
நல்குவது முறயல்ல, நீங்கள் ஒரு மத நல்லிணக்கவாதியானால்.
நிறைவாக சின வினாக்கள் :
v
சில
இஸ்லாமிய இயக்க தலைவர்கள், நன்றி பாராட்டும், முக-நூல் பயனர்களின் எண்ணிலடங்கா வாழ்த்தும்,
பாராட்டும் தங்கள் நீர்-பறவைக்கு பறந்து கொண்டிருக்க, பழநி-பாபா மத நல்லிணக்க விருது
விழா தான் முதல் பாராட்டு என்றும், பின் அவைகளையும் பெற்று, நேர்பட பேசுவில் இஸ்லாமியர்கள்
தங்களுக்கு ஒரு பாராட்டும் புரியவில்லை என்றும் கூறியது நியாயமா? அது ஏன் ? ஏன் இந்த
இடதிற்கேற்பான முரண்பாடுகள் ?
v
ஆயக்குடி
உரையில் சமூக போராளி போன்ற உரையும், நேர்பட-பேசுவில் ஏதும் அறியாதோர் நிலை கருத்தும்
யாரை திருப்தியடையச் செய்வதற்க்காக ?
v
நேர்பட-பேசுவில்
முஸ்லீம்கள் தரப்பு வாதத்திற்க்கு ஒரே ஒருவரும், அவருக்கு எதிர் தரப்பாக பொதுவுடைமைவாதிகளென
பின்னூட்டம் தாங்கிய காவி முகமூடிகளை நீங்கள் கண்டும், அறிந்தும் ஏன் அது ஒரு நியாயமற்ற
நிகழ்ச்சி, செயல் என மறுப்பு கூறவில்லை ?
v
இஸ்லாமிய
இயக்க தலைவரின் வாதங்களை கூற அந்நிகழ்வின் தொகுப்பாளர் சரியாக வாய்ப்பு பகராமல் இடைமறிப்பது
வெளிப்படையாக தெரிந்தும், ஏன் தாங்கள் அதை கண்டிக்கவில்லை ?
v
தணிக்கை
குழு ஒருமுகமாக செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் அதை தாங்கள் மறைப்பது ஏன்?
இதனால் தங்கள் எதிர்கால பலன் ?
v
இஸ்லாமிய
தீவிரவாத சித்தரிப்புகளை நீங்கள் வெளிப்படையாக கூறாமலிருப்பதன் திரைமறைவு ?
v
திரு.கமலஹாசன்
அவர்கள் செய்வது உண்மையில் கருத்து சுதந்திர அடிப்படை ரீதியான செயல் அல்ல, மாறாக தெளிவான
திட்டமிடல் என தாங்கள் அறிய பெறவில்லையோ?
v
பொதுவுடைமைவாதி,
சமூக சிந்தனையாளரான தாங்களுக்கு காவி குமபல்களின் பயங்கரவாத, தீவிரவாத உண்மை நிகழ்வுகளை
மறைமுகமாக மறைக்கும் கமலின் விஷம திட்டம் புரியாத ?
v
முன்னனி
துறை நிபுணர் என்பதால், தங்களின் சினிமா துறை தடைபடும் என்பதால் ஏதேனும் ஐயமோ ?
v
விபிலிய
மொழிக்கும், திருக்குரான் வசனத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தாங்கள் அறியாதது ஏனோ
?
v
இந்தியாவில்
அமெரிக்க காலோச்சும், அதன் தீவிர முயற்ச்சியின் பின்னனியும் பொதுவுடைமைவாதி தங்களுக்கு
தெரியவில்லையா ?
இவைகள் நான் திரு.சீனு-ராமசானி அவர்களிடம் வைக்கும்
கேள்விகள் ஆகும்….
இறுதியாக, என் இந்த விமர்சன
கட்டுரையின் மூலம் நீர்-பறவை திரைப்பட இயக்குநரை இழிவுபடுத்தும் எண்ணமோ, மட்டம் தட்டும்
நோக்கமோ அல்ல. மாறாக இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு உண்மை நிகழ்வை திரைப்படமாக எடுத்து,
இன்புறச் செய்த தாங்கள், தற்போது புரியும் கருத்து அனுகுமுறைகள்தான் சிறு வருத்தமாக
உள்ளது.
ஆகவே, தங்களை போன்றோர் வருங்காலத்தில்
இது போன்ற சிறு அனுகுமுறைகளை மாற்றி, இன்றைய திரைப்படத் துறையினருக்கு, ஓர் உன்னத முன்மாதிரியாய்
திகழ வேண்டும், என்ற வேண்டுகோளுடன் நிறைவு கொள்கின்றேன்.
தோழமையுடன்
- பழனி ஷஹான்


No comments:
Post a Comment