பூட்டு நகரமாம் திண்டுக்கல் மாநகரம். இம்மாநகரை மாவட்டமாய் கொண்ட பகுதிக்குள் அடங்கி இருக்கிறது பார் புகழும் பழங்களின் நகரமான பழனி நகர். பஞ்சாமிர்தத்தின் பிறப்பிடமான இப்பழனி நகரிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளதுதான் எனது பிறப்பிடமான கீரனூர்.
நூறு வருடங்களைத் தொட்டு நிற்கும் எனதூரின் பழமை முகவரியான பள்ளிவாசலும் (மசூதி), இந்த மசூதியின் அருகிலேயே அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலும், ஊரில் உள்ள ஒற்றை தேவாலயமும், எங்கள் ஊரின் அடையாளமாய் இசுலாமிய ஆன்மீகத் தளத்தில் நன்கு அறியப்பட்ட கீரனூரி என சிறப்பாய் அழைக்கப்படும் மெளலானா.கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் இல்லமும், நான் படித்த முஸ்லீம் தொடக்கப்பள்ளி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேலும் பெண்களுக்கான அரசுப் பள்ளி, ஊரின் தொன்மையில் ஒன்றான சத்திரம் உள்ளிட்டவைகளின் புகைப்படத் தொகுப்பை பல நினைவுகளுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
- பழனி ஷஹான்















No comments:
Post a Comment