கூடங்குளம் அணு உலைக்கு எதிராக
தொடர்ந்து போராடும், போராளி அண்ணன் சு.ப.உதயக்குமார் அவர்களை இடிந்தகரையில் சந்தித்து உரையாடினோம். இடிந்தகரை மக்களின் நிலை,
அவர்தம் வாழ்வியல், கல்வி, போராட்ட யுக்திகள், அம்மக்களின் மனநிலை போன்றவற்றை குறித்து அறிந்து
கொள்வதற்காக, கடந்த ஏப்ரல் 7 அன்று அங்கு சென்றிருந்தோம்.
அரச பயங்கரவாதத்தை,
அடக்குமுறையை முதன் முறையாக நேரில் கண்டு வந்துள்ளேன். அவர்களின் தொடர் போராட்டத்தின்
601-வது நாளில் நாங்கள் சென்று, அந்த ஒரு நாள் அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு
வந்தோம்.
உதயகுமார் வெளிநாட்டு பணம் வாங்குகிறார், வீணாக மக்களை மூலை சலவை செய்து மக்கள் நலனை முடக்குகின்றார் என்பன போன்ற இன்னும் சில அவதூறுகளுக்கு அவரிடமே கேள்விகள் கேட்டு விடை கண்ட பொழுது, பத்திரிக்கைகள் எந்த அளவு இந்த போராட்டத்தை நசுக்க முனைகின்றது என்பது தெளிவாகியது. உண்மையில் மக்கள் நலனுக்காக போராடும் இடிந்தகரைவாசிகளின் தியாகங்கள், அரசு பயங்கரவாதத்தாலும், பத்திரிக்கையின் பாசாங்குகளாலும் திரை மறைவு செய்யப்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் அவலம்..!
- பழனி ஷஹான்
No comments:
Post a Comment