“சே”
மரணித்த
ஒருவனின்
மரணிக்காத
ஓர் வடிவம்….
மனிதருள்
மடிந்திட்ட
உரிமைக்
கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர்
ஒற்றை எழுத்து !
புரட்சி
எனும் மொழியை
பாரில்
பலரை
பேச
வைத்த எழுத்து
ஏட்டளவிலும்
அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும்
முழங்க வைத்த எழுத்து !
அடிமைத்தனம்
எங்கு
சூழ்ந்திடினும்
எதிர்த்து
நின்றிடுவென
எளியோனையும்
கூற வைத்திட்ட
கடலலைச்
சீற்றம் !
எதேச்சதிகாரத்தின்
ஆணி
வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர
எழுத்து
உலகம்
முழுமைக்குமான விடுதலை
என்று
உறுமி
அடிமை
உள்ளங்களில் யாவும்
ஊக்கம்
தந்திட்ட ஊன்று கோல்,
துணிவின்
சுருக்கம் !
புரட்சி
எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும்
முகவரி
இந்த
ஒற்றை எழுத்து !
அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க
வைத்த அபாய ஒலி !
கொடுங்கோலனின்
கோட்டைக்குள்
நுழைந்து
சொடுக்கிட்டு
எச்சரித்த
தீப்பிழம்பு
!
தோட்டாக்களை
தோலுயர்த்தி
எதிர்த்து
நின்ற
வீரத்தின்
அகராதி !
வலைக்குள்
சிக்குண்ட போதும்
அலட்டு
சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை
!
பீரங்கிப்
படையை
தெரித்தோடச்
செய்த
தீரம்
நிறைந்த செந்நிற
கூர்
பார்வை கொண்ட
எரிகழல்
மாந்தனின் முதன்மை
எழுத்து
!
ஆர்ப்பரிக்கும்
அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத
அனல் காடு !
தோழமையுடன்
பழனி ஷஹான்
.






No comments:
Post a Comment